Wednesday, March 9, 2016

மீன் ரெண்டான் / Fish Rendaan (Cuddalore style)



தேவையான பொருட்கள்;
மீன் கழுவி எடுக்க:
மீன் துண்டுகள் - அரைக்கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு .
மசாலா மீன் பொரிக்க விரவ:
மீன்
மிளகாய்த்தூள், உப்பு.(விருப்ப பட்டால் சீரகத்தூள், மிளகுத்தூள்  சிறிது சேர்த்து விரவலாம்)
ரெண்டான் செய்ய தே. பொ:
எண்ணெய் -  4  - 5 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 3
பொடியாக நறுக்கி கொள்ளவும்.( அளவு உங்க விருப்பம்)
பச்சை மிளகாய் - 2 - 3 கீறி போடவும்.
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
தேங்காய்ப்பால் - 1கப்
நறுக்கிய மல்லி இலை - கொஞ்சம்.
எலுமிச்சை ஜூஸ் - விருப்பப்பட்டால்.

செய்முறை:
மீனை சுத்தம் செய்து நன்கு அலசி மீண்டும் மஞ்சள் உப்பு போட்டு கழுவி தண்ணீர் வடித்து மேற் சொன்ன போட்டு ஊற வைக்கவும்.



ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மசாலா விரவிய மீனை பாதி வேக்காடாக பொரித்து எடுக்கவும்.
    
தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் போட்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி பின்பு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.

மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.

நன்கு கூட்டு போல ஆக வேண்டும்.

இப்படி கூட்டு போல் ஆனவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

பொரித்த மீனை சேர்க்கவும். பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் சிறிது நேரம் வைக்கவும்.
நறுக்கிய மல்லியிலை சேர்க்கவும்.
புளிப்பு தேவைப்பட்டால் லெமன் ஜூஸ் சிறிது சேர்க்கவும்.

சுவையான மீன் ரெண்டான் ரெடி.
இந்த குறிப்பு அலைன் தோழி ஷர்புன்னிஷா சொல்லக் கேட்டு செய்து பார்த்தேன் .செமை..எங்க வீட்டில் ரொம்ப பிடித்திருந்தது.மிக்க நன்றி தோழி.
விருப்பப்பட்டால் நீங்களும் செய்து பாருங்க.

2 comments:

Menaga sathia said...

இது எங்க மாமியார் வீட்டின் ஸ்பெஷல் குறிப்பு,நாங்க மீன் அசாது ந்னு சொல்வோம்,இன்னிக்கு கூட எங்க வீட்ல மீன் அசாது தான் அக்கா..

sangeethas creations said...

சூப்பரா இருக்கு ..இந்த முறையில் செய்து பார்க்கிறேன் அக்கா...