Friday, March 4, 2016

வேர்க்கடலை பகோடா/ மசாலா வேர்க்கடலை / Masala Peanut/ Peanut Pakoda


தேவையான பொருட்கள்;
வேர்க்கடலை (உரித்தது)- 1 கப்
கடலை மாவு - 3 -4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 - 3/4 டீஸ்பூன்
மாங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
உப்பு - அரைடீஸ்பூன் (தேவைக்கு )
பொரிக்க எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:



கடலையுடன் எண்ணெய் தவிர மேற்சொன்ன பொருட்கள் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு விரவி வைக்கவும். கெட்டியாக பக்கோடாவிற்கு விரவுவது போல் இருக்க வேண்டும்,

ஒரு கடாயில் தேவைக்கு எண்ணெய் சூடு செய்யவும்.
மிதமான நெருப்பில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான மொறு மொறு மசாலா கடலை தயார்.
பின் குறிப்பு:
பாட்டிலில் போட்டு வைத்தால் மாதக் கணக்கில் இருக்கும்.

நான் எண்ணெய் விட்டு பொரிக்க ஆப்பச்சட்டி உபயோகித்துள்ளேன்.அதில் எண்ணெய் குறைவாக செல்லும், இரு முறையாக போட்டு பொரித்து எடுக்கலாம்.

2 comments:

Avargal Unmaigal said...

இதை வீட்டில் செய்து சாப்பிட ஆசை சில தடவை செய்து பார்த்துள்ளேன் ஆனால் படத்தில் உள்ளது போல உதிரி உதிரியாக வருவதில்லை... உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

கொஞ்சம் பார்சல் அனுப்புங்களேன் ஆசையா இருக்கு.