Thursday, March 3, 2016

எள்ளு சாதம் / Sesame rice




தேவையான பொருட்கள் ;
வடித்த சாதம்
எள்ளு பொடிக்கு:
கருப்பு எள் அல்லது வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்(விரும்பினால்)
மிளகாய் வற்றல் -  3 - 4
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
கிள்ளிய மி.வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வேர்க்கடலை அல்லது முந்திரி பருப்பு - உடைத்தது 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து பின்பு வடித்த சாதம் சேர்க்கவும்.
பின்பு எள்ளுப்பொடி சேர்க்கவும்.
ஒரு போல் பிரட்டவும்.சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பொரித்த முட்டை அல்லது சிப்ஸ் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும். சூப்பராக இருக்கும்.




No comments: