Friday, April 1, 2016

ஹெல்தி வெஜ் மொமொஸ் / Healthy Veg Momos


ஹெல்தி வெஜ் மொமொஸ் ரெசிப்பி பகிர்வு-  நன்றி திருமதி பௌசியா சம்சுதீன்.

தேவையான பொருட்கள் :

மேல் மாவு:-
கோதுமை மாவு - 2 கப்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் - 2டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1டீஸ்பூன்
ஓமம்- 1 டீஸ்பூன்
சீனி - ஒரு பெரிய பின்ச்
உப்பு - தேவைக்கு.
தேவைக்கு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசைந்து கொள்ளவும்.

 உள்ளடக்கம் செய்ய:-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
முளைகட்டிய பச்சை பயறு - 100 கிராம்
உருளைக்கிழங்கு- 100 கிராம்
வெங்காயம் , தக்காளி - தலா1
பச்சை மிளகாய் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்,சோம்பு,சீரகம்கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து,வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
தூள் வகைகள் சேர்த்து வதக்கி, மசித்த உருளை, முளைகட்டிய பயறு சேர்த்து ,தக்காளி ,உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
மேல் மாவு சிறிது எடுத்து பூரி போல் பரத்தி உள் அடக்கம் வைத்து விருப்பமான வடிவில் செய்து இட்லி குண்டானில் உள்ள தட்டில் எண்ணெய் தடவி அதனில்    வைத்து அவித்து எடுத்தால்
ஹெல்தி வெஜ் மொமொஸ் தயார்.

ரெசிப்பி பகிர்வு - நன்றி திருமதி பௌசியா சம்சுதீன்.

No comments: