Friday, May 13, 2016

இடிசக்கை துவரன் / Idi chakkai thuvaran


குற்றாலம் சென்ற பொழுது அங்கு பறித்து வந்த பலாப் பிஞ்சு வைத்து செய்து பார்த்தது.
தேவையான  பொருட்கள்:-
பலாபிஞ்சுக்காய் - நறுக்கியது 2 கப் அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அரைக்க:-
தேங்காய்த் துருவல் 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -3 - 4
சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
தாளிக்க:-
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா 1டீஸ்பூன்
பெரிய வெங்காயம் நறுக்கியது 2
கருவேப்பிலை
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது.

செய்முறை:-

 பலாக்காயை வெளித்தோல் எடுத்து துண்டாக நறுக்கி நடுப்பகுதியை கழித்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.


 நறுக்கியவற்றை மஞ்சள் தூள் உப்பு போட்டு வேக வைக்கவும்.
 வெந்ததை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு பரபரபவென்று சுற்றி எடுக்கவும்.
 மேலே அரைக்க சொன்னபடிபொருட்கள் சேர்த்து தேங்காய் பரபரவென்று அரைத்து வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு கருவேப்பிலை, பெருங்காயம், வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும்.
 வெங்காயம் வதங்கியதும் வேகவைத்து உதிர்த்த பலாக் காயை சேர்க்கவும்.
 நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
 அரைத்த தேங்காயை சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போடவும்.
பிரட்டி விட்டு விரும்பினால் நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
சுவையான இடிசக்கை துவரன் தயார்.
பக்க உணவாகச்  சோறு, கஞ்சி இவற்றுடன் பரிமாறலாம்.குற்றாலம் சென்ற பொழுது பறித்து வந்தது.நீண்ட நாட்களாக  நினைத்து செய்து பார்த்த ரெசிப்பி.

3 comments:

shameeskitchen said...

Nalla irukku....

சாந்தி மாரியப்பன் said...

அட்டகாசமான ருசியுடனிருக்கும் இந்தத்துவரன் இப்பொழுது எங்கள் வீட்டில் விருப்பமான ஒன்றாகி விட்டது. படங்கள் எடுத்து விட்டு கிடப்பில் போட்டிருக்கிறேன். செய்முறையுடன் ஒரு நாள் எனது வலைப்பூவிலும் பகிர வேண்டும் :-)

Mahi said...

ஊரில ஆசாரி வைத்து பலாப் பிஞ்சை கொத்தித் தரச்சொல்லி இப்படி செய்வாங்க. சூப்பரா இருக்கும்!! பார்க்கவே நல்லா இருக்கு அக்கா! என்ஜாய்!!