Monday, June 13, 2016

ப்ரெட் சட்டி பத்திரி / Chatti pathiri using bread

இக்குறிப்பையும் படங்களையும் அனுப்பி தந்த மருமகள் சுல்தானா மக்ஃபிராவிற்கு மனமார்ந்த நன்றி.நல்வாழ்த்துக்கள்.
தேவையான பொருட்கள்;
ஹோல் வீட் ப்ரெட் - 12 துண்டுகள்
முட்டை - 6
தேங்காய்ப்பால் - 1/4 கப்
வேகவைத்து உதிர்த்த சிக்கன் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4
நறுக்கிய தக்காளி  - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 +1  டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 +1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் -1/2 + 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா1/4 +1/4  டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய மல்லி  இலை
எண்ணெய் .நெய் - சிறிது தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.
(காரம் அவரவர் விருப்பம்)

செய்முறை:
சிக்கனை  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,, இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா ,உப்பு  சேர்த்து வேக வைக்கவும். ஆறிய பின்பு உதிர்த்துக் கொள்ளவும். சிக்கனில் எலும்பு இருந்தால் நீக்கி விடவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது,நறுக்கிய  மிளகாய், தக்காளி, மஞ்சள் ,மிளகாய்,கரம் மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும், உதிர்த்த சிக்கன் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அத்துடன், சிறிது உப்பு ,மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு  நான்ஸ்டிக் பேனில் நெய் தடவி, அதனில் முட்டையில் முக்கிய ப்ரெட் அடுக்கவும்.அதன் மேல் சிக்கன் கலவையை வைக்கவும் முட்டை கலவையை விடவும். மீண்டும் முட்டையில் டிப் செய்த ப்ரெட்டை வைக்கவும்.சிக்கன் கலவையை அதன் மேல் பரத்தி வைக்கவும்.கொஞ்சம் முட்டை கலவையை விடவும். மீண்டும் முட்டையில் டிப் செய்து ப்ரெட்டை வைக்கவும்.இறுதியாக  மீதி உள்ள முட்டை கலவையை மேலே விடவும்.

மூடி போட்டு சிம்மில் வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அப்படியே  ப்லேட் உதவியோடு திருப்பி மேல் பகுத்தியும் வேக வைக்கவும்.
வெந்த பின்பு திருப்பி எடுத்து கட் செய்து பரிமாறவும்.
இது ப்ரெட் உபயோகித்து செய்யக் கூடிய ஈசியான பத்திரி ரெசிப்பியாகும்.
சுவையான ப்ரெட் சட்டி பத்திரி  ரெடி.
டிப்ஸ் ; அடிகனமான நான்ஸ்டிக் தவாவை உபயோகித்து செய்யவும்.இல்லையெனில் அடி பிடித்து விடும்.
ரெசிப்பி பகிர்வு : மருமகள் சுல்தானா மக்ஃபிரா.
இன்று பிறந்தநாள் காணும் சுல்தானாவிற்கு மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள் மற்றும் ரெசிப்பி பகிர்வுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி.
சுல்தானா முன்பே சிறப்பு விருந்தினர் பகிர்வில் மலபார் மீன் பிரியாணி செய்து அசத்தியிருக்கிறார்.

No comments: