Wednesday, July 27, 2016

சுரைக்காய் பொரியல் / Bottle gourd poriyal

பொதுவாக எனக்கு சுரைக்காய் என்றால் அவ்வளவு விருப்பம். அதுவும் அதீதமாய் சொம்பு சுரைக்காய் சேலத்திலிருந்து ஸ்பெஷலாய் வந்த வீட்டு தோட்டத்துக்காய், வெள்ளரியை விட சுவை.அப்படியே நறுக்கினால் சும்மாவே சாப்பிடலாம். கொஞ்சம் சாலட் செய்து சாப்பிட்டுவிட்டு மீதி பொரியல், கூட்டுன்னு வைத்து அசத்தியாச்சு..
தேவையான பொருட்கள்;-
நறுக்கிய  சுரைக்காய்  - கால் கிலோ
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கிள்ளிய வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-


சுரைக்காயை தோல் சீவிக் கொள்ளவும்.

பஞ்சு மாதிரி சுரைக்காய் விதையே இல்லை.
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன். கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பெருங்காயம், மஞ்ச,சீரகத்தூள் சேர்க்கவும்.
நறுக்கிய சுரைக்காய் தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி மூடி வேக விடவும்.
காய் வெந்து வரும்.
தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிரட்டவும்.
சுவையான சுரைக்காய் பொரியல் ரெடி.

மறுநாள் மீதி காயை சுரைக்காய் கூட்டு வைத்து அசத்தியாச்சு.
என்னுடைய சுரைக்காய் தோல் துவையல் , கூட்டு ரெசிப்பிக்கு  கிளிக்கவும்..
என்னுடைய சுரைக்காய்  மசாலா கூட்டும் செமையாய் இருக்கும்.

4 comments:

பரிவை சே.குமார் said...

படங்களுடன் பகிர்வு அருமை அக்கா...

Mahi said...

சுரைக்காய் எனக்கும் ஃபேவரிட்!! இன்னிக்கு கூட உங்க "சுரைக்காய் கடலைப்பருப்பு கூட்டு" தான் செய்தேன்! பொரியலும் இதே மெதட்ல செய்வேன். மசாலா கூட்டு ரெசிப்பி செய்து பார்க்கணும் ஒரு நாள்!! :)

வெங்கட் நாகராஜ் said...

சுரைக்காய் ரெசிப்பி நன்று. இங்கே இந்த வகை சுரைக்காய் கிடைப்பதில்லை. நீட்டு சுரைக்காய் தான். அதிலும் செய்யலாம்... செய்து விடுவோம்!

surejini Bala said...

முதல் தடவை இப்பிடி செய்திருக்கன் .செம்ம்ம டேஸ்டி.இனிமேல் இப்பிடித்தான் செய்யிறதா இருக்கேன்.தங்யூ ஆசியா அக்கா.பேஸ்புக் ல படம் போடுறேன்.