Friday, July 22, 2016

கத்திரிக்காய் கட்டா / Brinjal Katta

இது கிட்டதட்ட எண்ணெய் கத்திரிக்காய் மாதிரி தான். ஒவ்வொரு முறையும் சிறிய மாறுதலுடன் சமைப்பதுண்டு. இந்த முறை முறை கத்திரிக்காய் கட்டா என்ற பெயருடன் பரிமாறல்.பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.
 தேவையான பொருட்கள்;-
பிஞ்சு வயலட் கத்திரிக்காய் - அரைக்கிலோ
எண்ணெய் - 75-100 மில்லி
புளி ஊற வைக்க எலுமிச்சை  அளவு
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு தேவைக்கு.
வறுத்து அரைக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள்ளு - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்.
(முழு மல்லி, மிள்காய்வற்றல் கூட உபயோகிக்கலாம்.)
செய்முறை:

முதலில்  எண்ணெய் சூடானவுடன் வறுக்கச் சொன்ன பொருட்கள் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து கருகாமல் ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
 ஒரு ப்ரெஸ்ஸர் பானில் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கத்திரிக்காய் சேர்க்கவும்.
 மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.
 அரைத்த விழுது சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.
 புளித்தண்ணீர் சேர்க்கவும்.
 கலந்து மூடி மீடியம் ப்லேமில்  2 விசில் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் பிரட்டி எடுத்து கத்திரிக்காய் உடையாமல் எடுத்து வைத்து பரிமாறவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும்,பிரியாணி,புலாவ், வெறும் சோறு,இட்லி,தோசைக்கு கூட பொருத்தமாக இருக்கும்.
 சுவையான கத்திரிக்காய் கட்டா ரெடி.

3 comments:

nasreen fathima said...

Hunga palaya post steffed ennai kathirikai romba super ya irukum. ..Ippa idha paarthalum arumaiya iruku. Facebook la paartha hudan comment poda ponain. But n friends paartha avargalum kathukolvaanga nu sinna poramai adu dhan blog la pottain

பரிவை சே.குமார் said...

ஆஹா...
செய்து பார்க்கணும் அக்கா...

வெங்கட் நாகராஜ் said...

கட்டா - ஹிந்தியில் புளிப்பு.... புளி சேர்ப்பதால் இந்தப் பெயரோ..