Friday, July 1, 2016

Chicken Cutlet / சிக்கன் கட்லெட்

 தேவையான பொருட்கள்;
போன்லெஸ் சிக்கன் வேக வைத்து உதிர்த்தது - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 4 -5 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் - தலா கால் டீஸ்பூன்
சோம்பு ,சீரகம், மிளகுத்தூள்,கரம் மசாலா தலா -அரை டீஸ்பூன்
மல்லி புதினா நறுக்கியது - சிறிது
முட்டை - 1அல்லது 2
ப்ரெட் கிரம்ஸ் - தேவைக்கு.
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:-
சிக்கனை சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டுவேக  வைத்து ஆற விட்டு உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து ஆற வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்.

 ஒரு பேனில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.


 மேலே குறிப்பிட்ட படி மசாலா தூள்கள்சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.
 வேக வைத்து உதிர்த்த சிக்கன் சேர்க்கவும்.
 நன்கு ஒரு சேர பிரட்டவும்.
 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 நன்கு கலந்து நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.
 ஆறிய பின்பு உருண்டைகளாக பிடிக்கவும்.
 கட்லெட்டிற்கு தயார் செய்த உருண்டைகளை முட்டையில் முக்கி, ப்ரெட் கிரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
 வேண்டுமானால் இப்படி முன்பெ ரெடி செய்து ப்ரீசரில் வைத்து தேவைக்கு மறுநாள் எடுத்து உபயோகிக்கவும்.

 ஒரு ஃப்ரை பேனில் தேவைக்கு எண்ணெய் விட்டு மிதமாக சூடானவுடன் கட்லெட்டை இருபுறமும் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

 சுவையான சிக்கன் கட்லெட் ரெடி. இதனை டொமட்டோ சாஸ் அல்லது கிரீன் சட்னியுடன் பாரிமாறலாம்.

என்னுடைய பனீர் வெஜ் கட்லெட் ரெசிப்பிக்கு இங்கு கிளிக்கவும்.

No comments: