Saturday, July 23, 2016

தூதுவளை ரசம் / Thoothuvalai rasam

 தேவையான பொருட்கள்:-
ரசத்திற்கு தட்டிக் கொள்ள:-
தூதுவளை ஒரு கைபிடி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - விரும்பினால்(நான் சேர்க்கவில்லை)

தாளிக்க:
எண்ணெய் - 1  -2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பருப்பு வேக வைத்த தண்ணீர் (சிறிது பருப்புடன்)(விரும்பினால்)
உப்பு தேவைக்கு.

செய்முறை:-
தூதுவளை ஃப்ரெஷாக ஆய்ந்து  கொள்ளவும்.

 ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரசத்திற்கு தட்டிக் கொள்ள வேண்டிய பொருட்களை வதக்கிக் கொள்ளவும்.


 மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு சுற்றி எடுக்கவும்.

 தாளிக்க அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
 மிக்ஸியில் சுற்றி எடுத்ததை சேர்க்கவும்.மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
 புளித்தண்ணீர் சேர்க்கவும்.தண்ணீருடன் பருப்பும் விரும்பினால்  சேர்க்கவும். ரசப்பொடி சேர்க்கவும்.

 தேவைக்கு உப்பு சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி.
அப்படியே சூப் போல் குடிக்கலாம். அல்லது சுடு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். செமையாக இருக்கும். சளித்தொந்திரவுக்கு நல்லதாம்.

2 comments:

பரிவை சே.குமார் said...

தூதுவளை ரசம் ஊரில் குடித்திருக்கிறேன்...
உங்கள் குறிப்புப் படி ஊருக்குப் போகும்போது செய்யச்சொல்லி சாப்பிடலாம்.

வெங்கட் நாகராஜ் said...

தூதுவளை இங்கே கிடைப்பதில்லை. ஊருக்குப் போகும் போது தான் சாப்பிட முடியும். நல்ல குறிப்புக்கு நன்றி.