Sunday, July 10, 2016

வெஜிடபிள் பகோடா / Vegetable Pakoda

பக்கோடா மிக்ஸ் ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு மாதிரி செய்வேன். வீட்டில் இருக்கும் பொருட்களைப் பொருத்து.
தேவையான பொருட்கள்;-
சிறிதாக  நறுக்கிய  காய்கள் - ஒரு கப் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,உதிர்த்த பச்சை பட்டாணி - கால் கப்,),நறுக்கிய வெங்காயம் -கால் கப்
நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய்- சிறிது
அரை கப் -கடலை மாவு
கால் கப் - அரிசி மாவு ( அல்லது அரை கப் கூட போடலாம் அல்லது ஒரு கப் கடலை மாவு மட்டும் கூட போடலாம்.)
எண்ணெய் பொரிக்க தேவைக்கு.

மாவுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு,கால் டீஸ்பூன் கரம் மசாலா, சோம்பு, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி,உப்பு  சுவைக்கேற்ப சேர்க்கவும்., சோடா உப்பு பிஞ்ச் சேர்க்கவும்.
காய்கறிகளோடு கலந்து கொள்ளவும்.எண்ணெய் காய வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மாவில் விட்டு பிசறவும்.

 காய்ந்த எண்ணெயில் சிறிதாக எடுத்து போடவும்.பொன்னிறமாக பொரிந்தவுடன் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.

இதனைப் போண்டா மாதிரியும் போடலாம்.
நோன்பு நேரம் ஆனியன் பக்கோடா போடுவதுண்டு ,ஒரு மாற்றத்திற்கு கஞ்சிக்கு பக்க துணையாக இந்த பக்கோடாவும் போடலாம்.
இது ஒரு முறை மிக்ஸ் வெஜ் பக்கோடா பார்க்க கிளிக்கவும்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும் போல இருக்கே.... செஞ்சுடுவோம்!

பரிவை சே.குமார் said...

ஆஹா... பக்கோடாவில் சமோசாவிற்கு சேர்ப்பது போல் எல்லாம் சேர்த்து... புதுமையாக இருக்கே அக்கா..
செய்து பார்க்கணும்.