Thursday, August 11, 2016

ஏர் ப்ரைட் முழுக்கோழி / Air fried whole chicken

தேவையான பொருட்கள்:-
சுத்தம் செய்த முழுக்கோழி - 800 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மசாலா ஊற வைக்க :-
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகு  சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்
மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - 1-2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
லைம் ஜூஸ் - ஒரு பழம்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-
சுத்தம் செய்த கோழியை நன்கு அலசி  மஞ்சள் தூள் போட்டு மீண்டும் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.கோழியை போர்க் கொண்டோ அல்லது கத்தியால் லேசாக அங்கங்கே கீறி விட்டு கொள்ளவும். சிக்கன் தோல் எடுத்துவிட்டும் கிரில் செய்யலாம்.



முதலில் லைம்   ஜூஸ்,உப்பு கோழியின் மீது போட்டு எல்லாப் பக்கமும் படுமாறு செய்யவும்.


மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து கலந்து கோழி முழுவதும் தடவி   ஊற  வைக்கவும்.உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்து விரவவும். பிழிந்த எலுமிச்சை துண்டுகளை கோழியின் வயிற்றுப் பகுதியில் வைக்கலாம்.எலுமிச்சை மணத்துடன் இருக்கும்.

குறைந்தது 2 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஏர் ப்ரையரை 3 நிமிடம் முற்சூடு  செய்யவும்.

ப்ரை செய்யக் கூடிய பாஸ்கட்டில் விரும்பினால் நறுக்கிய உருளை அல்லது பிங்கர் சிப்ஸ் பரத்தி வைக்கவும்.
பின்பு மசாலாவில் மேரினேட் செய்த சிக்கனை வைக்கவும்.

ஏர் ப்ரையரில்  200 டிகிரி வெப்பத்தில் செட் செய்து கொள்ளவும். 10 நிமிடம் முதலில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
சிக்கனை திருப்பி வைக்கவும்.
மீண்டும் 10 -15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூப்பர் சாப்ட் சிக்கனும் கிரிஸ்பி பிங்கர் சிப்ஸும் தயார் .


அவங்க அவங்களுக்கு பிடித்த துண்டை கட் செய்து சாப்பிடலாம்.
ஆரோக்கியமான முறையில் தயார் செய்த சிக்கன் தயார்.செமையாக இருக்கும் .

1 comment:

பரிவை சே.குமார் said...

படங்களுடன் விளக்கமாய்...
அருமை அக்கா...