Tuesday, August 30, 2016

சேப்பங்கிழங்கு வறுவல் / Colocasia fry

தேவையான பொருட்கள்;-
சேப்பங்கிழங்கு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பூண்டு தட்டியது - 6
கருவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு சாம்பார் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் கூட சேர்க்கலாம்..
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது.
பூண்டு விரும்பாதவங்க பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

செய்முறை:
முதலில் தோல் சீவிக் கொள்ளவும்.பின்பு அலசி எடுக்கவும்.


வட்டமாகவோ அல்லது நீள் வாக்கில் துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுக்கவும். குழையக் கூடாது. அரைவேக்காடாக இருக்க வேண்டும்.தண்ணீர் வடித்து ஆறியவுடன் மசாலா உப்பு பிரட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நைசாக தட்டிய பூண்டு கருவேப்பிலை, நறுக்கிய சேப்பங்கிழங்கு போட்டு மூடி வேக விடவும்.
திறந்து பிரட்டி விட்டு திரும்பவும் சிறிது நேரம் வேக விடவும்.மொத்தமாக 10 நிமிடத்திற்குள் சூப்பராக சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
பருப்பு,சாம்பார்,ரசம்,தயிர், வெரைட்டி ரைஸ்க்கு செம காம்பினேஷன்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் குறிப்பு. நன்றி.

கோமதி அரசு said...

அரை வேக்காடாக வேக வைத்துக் கொண்டு, செய்வேன், அல்லது கொஞ்சம் வேக வைத்து விட்டு எண்ணெயில் போட்டு எடுத்து செய்வேன். நீங்கள் சொல்லும் முறைப்படி செய்து பார்க்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசியா.
வாழ்க வளமுடன்.