Saturday, August 6, 2016

பச்சை மிளகாய் சிக்கன் பிரியாணி / Green chilli chicken briyani


தேவையான பொருட்கள்;-
பாசுமதி அல்லது சீரக சம்பா - 1 கிலோ
சிக்கன் - 1.1/4 கிலோ
(சிக்கன் நூறு கிராம் துண்டாகப் போடவும்)
வெங்காய்ம் - 400 கிராம்
தக்காளி - 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 100  -125 கிராம்
எண்ணெய் நெய் மிக்ஸ் - 250 -300 மில்லி
எலுமிச்சை - 1
தயிர் - அரை கப்
முந்திரி - 50 கிராம்
உப்பு - தேவைக்கு.
பிரியாணி மசாலா பொடிக்க:
ஏலக்காய் - 8-10
பட்டை - சிறிய சுருள்
கிராம்பு - 10
பெருஞ்சீரகம், சீரகம், கருஞ்சீரகம் - தலா அரைடீஸ்பூன்
நட்சத்திர மொக்கு - 1
அன்னாசிப்பூ - 1
ஜாதிக்காய் - சிறிய துண்டு



பிரியாணி கிரீன் பேஸ்ட் :-
பச்சை மிளகாய் - 15
கொத்தமல்லி இலை - 3 கையளவு
புதினா இலை - 2 கையளவு
கருவேப்பிலை - ஒரு கையளவு



எல்லாம் தயார் செய்து விட்டு வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைக்கவும்.

 பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 
வதங்கியவுடன் இஞ்சி பூண்டு  பொடித்த பிரியாணி மசாலா சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பிரட்டி விட்டு சிறிது நேரம் மூடி போடவும்.நன்கு வதங்கி மணம் வர ஆரம்பிக்கவும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

தேவைக்கு சிறிது உப்பு  சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கட்டும்.


 வதங்கிய பின்பு தயிர் சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.
 அரைத்த கிரீன் பேஸ்ட் சேர்க்கவும்.
 நன்கு வதங்கட்டும்.
 சிக்கன் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சிறிது சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.மூடி வேக வைக்கவும்.
அரிசியை ஒரு மணி நேரம் ஊற  வைக்கவும். பின்பு தண்ணீர் வடித்து வைக்கவும்.

பிரியாணிக்கு அரிசி வேக வைக்க ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.சிறிது மல்லி,புதினா தேவைக்கு  உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். 

 அரிசி முக்கால் வேக்காடு வெந்தவுடன் வடித்து எடுக்கவும்.

 சிக்கன் நன்கு வெந்து  வரும்.பாதி எலுமிச்சை பிழிந்து பிரட்டி விடவும்.
 வடித்த சோற்றை  பிரியாணிக்கு ரெடி செய்த மசாலா மீது தட்டவும்.பாதி எலுமிச்சையை மேலே பரவலாக பிழிந்து ஒரு பிரட்டு பிரட்டவும். வறுத்த வெங்காயம், மல்லி புதினா தூவவும்.
 விரும்பினால் சிறிது ஆரஞ்ச் கலர் தெளிக்கலாம்.வறுத்த முந்திரி சேர்க்கவும்.மூடி தம்மில் 20 நிமிடம் சிம்மில் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.
.

10 நிமிடம் கழித்து திறந்து  பக்குவமாக  பிரட்டி விடவும் .


 சூடாக ஆனியன் ரைத்தா அவித்த முட்டையுடன் பரிமாறவும்.
வித்தியாசமாக சிக்கன் பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி முயற்சி செய்து பார்க்கவும்.




5 comments:

பரிவை சே.குமார் said...

கண்டிப்பாக செய்து பார்க்கணும் அக்கா...

Benazir Ajmal said...

HAI AUNTY I AM BENAZIR FROM BENGALORE I TRIED UR CHILLY CHIKEN BIRIYANI TODAY ITS BECAME VERY TASTY WE R JOINT FAMILY TOTALY 13 MEMBERS ALL ARE LIKED VERY MUCH THANKS FOR UR WONDERFUL RECIPE

Asiya Omar said...

குமார் செய்து பாருங்க. அருமையாக இருக்கும்.

பெனாசிர் அஜ்மல் உங்கள் நிறைவான பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி .போஸ்டிங் போடுவதை நிறுத்தலாம் என்று நினைத்த நேரம் உங்கள் கருத்து கண்டு ப்ளாகில் நேரம் கிடைக்கும் போதாவது பகிர வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.நன்றிமா.

Lalitha Mani said...

hi ka... i am newly married... i am a foodie and my husband as well. i have been following yours and practicing at my mums home. one or two months il go to saudi with my husband. please share me your phone number to my mail id ka. i want to get a good name from my husband as i dont know much in cooking. thanks ka .

lalithahr.mssw@gmail.com

Asiya Omar said...

Sorry lalithamani,mukam theriyathavarkalukku phone number kodupathillai.doubt iruntha comment til ketkalam.