Thursday, August 18, 2016

இறால் தேங்காய்ப்பால் குழம்பு / Prawn coconut milk curry

தேவையான பொருட்கள்:-
உரித்து சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த இறால் - 300 கிராம்
இறாலில் பிரட்டி வைக்க அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,உப்பு சிறிது.

எண்ணெய் -2 -3  டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் பெரியது - 2
நறுக்கிய பச்சை மிளகாய் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி அரைத்தது  பெரியது 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம்,சோம்புதூள் - தலா அரைடீஸ்பூன்
விரும்பினால் கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பெரிய பின்ச் வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள்
விரும்பினால் புளிக்கரைசல் சிறிது.
தேங்காய்ப்பால் மீடியம் திக்னெஸ் - 1 கப்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை சிறிது.

செய்முறை:-

கடாயில் எண்னெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். நறுக்கிய மிளகாய்,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.
உப்பு சிறிது சேர்த்து மூடி வதங்க விடவும்.

வதங்கியவுடன் மேற்சொன்ன மசாலாப் பொருட்கள் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் இறால் சேர்க்கவும்.
மூடி வேக விடவும்.வெந்த பின்பு மல்லியிலை தூவி இப்படியேயும் பரிமாறலாம்.

வெந்து தண்ணீர் வற்றி வரும்பொழுது தேங்காய்ப்பால் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
சுவையான இறால் தேங்காய்ப்பால் குழம்பு தயார்.

ப்லைன்ரைஸ்,ஆப்பம்,இடியாப்பம்,சப்பாத்தி,பரோட்டா,இட்லி,தோசை எல்லாவற்றுக்கும் செம காம்பினேஷன் இந்தக் குழம்பு.



1 comment:

பரிவை சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை அக்கா...