Saturday, August 20, 2016

உப்பு பேரீச்சங்காய் (உப்பில் ஊறியது) / Raw dates pickle

அல் ஐனில் எட்டு வருடமாக ஒரே இடத்தில் தான் இருக்கிறோம். இப்ப கடும் வெயில், பேரீச்சை மரங்கள் பழுத்து தொங்கும் காட்சி கண்கொள்ளாமல் பார்க்கலாம். நாங்கள் இருக்கும் இடம் சுற்றிலும் பேரீச்சை தோப்புக்கள்,நடை பாதை கூட பேரீச்சை மரங்களின் அணிவகுப்பு தான். வருடம் தோறும் இந்தக்காய்  கிடைக்கும், ஆனால் போஸ்டிங் போட்டதில்லை.
உங்களுக்காக உப்பு பேரீச்சங்காய் ..சும்மா ஒரு ஷேரிங்.
 தேவையான பொருட்கள்;-
பேரீச்சங்காய் (கொட்டையில்லாதது)- அரைக்கிலோ
பச்சை மிளகாய்- 5
வினிகர் - 2 டீஸ்பூன்
விரும்பினால் இஞ்சி நறுக்கி சேர்க்கலாம்.
உப்பு  தேவைக்கு
 இது சீட்லெஸ் வெரைட்டி.
 நன்கு மண் தூசி போல அலசி நீள்வாக்கில்  நறுக்கி கொள்ளவும்.
 ஒரு பாட்டிலில்  பேர்ரீசங்காயை போட்டு  உப்பு, கீரிய பச்சை மிளகாய்,வினிகர்  சேர்த்து குலுக்கி வைக்கவும்.
 விரும்பினால் அரை கப்  தண்ணீர் சேர்க்கலாம்.
 நான்கு நாட்களில் ஊறி விடும்.
 சத்துள்ள இந்த ஊறுகாய் சும்மாவே சாப்பிடலாம்.உப்பு நெல்லிக்காய் போலவே சுவையும் அதீதம்.

 வாக்கிங் போகும் பொழுது மொபைல் கிளிக்.







 மரத்தில் இருந்து பறித்தது.
அப்படியே ஃப்ரெஸ் டேட்ஸ் எடுத்துக்கோங்க..

1 comment:

பரிவை சே.குமார் said...

ஆஹா....
பேரிச்சம்பழ ஊறுகாய்...
அருமை...