Wednesday, August 10, 2016

ஸ்பைசி கிரில்டு மீன் / சுட்ட மீன் ( ஏர் ப்ரையர் முறை)Spicy grilled fish (air fryer method)

தேவையான பொருட்கள் :-
மசாலாவில் பிரட்டி ஊற வைக்க:-
சுத்தம் செய்த மீன் அரைக்கிலோ
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்தூள் 1-2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் -கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1-2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மேற்சொன்னபடி மசாலா தயார் செய்து மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஏர்ப்ரையரின் கிரில் தட்டில் வைக்கவும்
ஏர் ப்ரையரை மூன்று நிமிடம் முற்சூடு செய்யவும்.
200 டிகிரி வெப்பத்தில் முதலில் 8 நிமிட வைக்கவும்.பின்பு திருப்பி 8 நிமிடம் வைக்கவும்.
கவனமாக கிரில் தட்டில் இருந்து எடுத்து உடனே பரிமாறவும்.சாதாரணமாக மீன் ப்ரை செய்தால் வீடே மணக்கும்.ஆனால் ஏர்ப்ரையரில் செய்யும் பொழுது வீட்டில்   மீன் சமைத்த மணமே தெரியாது.
மீன் சாப்டாக டேஸ்டாக இருக்கும்.

No comments: