Friday, September 30, 2016

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 35 திருமதி.தில்லி ராணி / தேங்காய்ப்பால் சாதம் / சிக்கன் பெப்பர் கறி / Guest Post / Mrs Dilli Rani / Coconut milk rice / Chicken pepper curry

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி. தில்லி ராணி.   இவர் எனக்கு மெயில் ஒன்று அனுப்பி,    என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.  கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ன? மெயிலில் குறிப்பு அனுப்பி சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள தனக்கு விருப்பம் என்று சொன்னதோடல்லாமல், முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவங்க
பாராட்டு தெரிவித்து,  நீண்ட நாட்களாக என்னுடைய வலைப்பூவை பார்வையிட்டு வருவதாயும், குறிப்பாக இவருடைய அசைவ சமையல் தேர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்ட பொழுது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 
இவர் தன்னுடைய சுய அறிமுகமாக அனுப்பியதை அப்படியே இங்கே பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இதோ உங்களுக்காக:

Intro:
I am Mrs. Dillirani Nagarajan, currently residing in Taiwan with my family. Me and my husband, Mr. Balamurugan are post-doctoral researchers working in the same university. We are blessed with a daughter, Dyuthi Balamurugan, now in KG-2. Vellore is my home town and after marriage I moved to Taiwan. I started cooking early since my mom was working. My mom and my sis are my inspirations to cook as both of them are great cooks and somehow they take control of the kitchen like no one I have ever seen. The things I make which my family loves are: crispy dosas, ginger tea, biriyani and variety rice, sweets like carrot halwa and rasagulla, Idli sambhar. My daughter is a picky eater and forever I am trying new dishes to impress her, and I must say my husband is the guinea pig for all my cooking experiments. He is not very particular about food so it makes my life easier. The chicken curry recipe I gave here is the only one chicken recipe I knew when I got married and the only one I used to make until two years ago. Aasiya mams blog is my go-to blog for both veg and non-veg recipes and I remember Guntur chicken is the first recipe of hers which I tried. I saw that recipe in arusuvai.com and found out about her blog. Ever since I have tried many recipes from her blog and it has never failed. So if you are reading this I know you too are a fan of Aasiya mams blog. After I started communicating with her via email about this post, I came to know that she is a very warm person with great respect for even novice cooks like me. Her prompt reply to my emails proves just that. Thank you Mam for posting this recipe. Happy cooking everyone.   

நல்வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சார்ந்த நன்றி மா. 
இனி குறிப்பிற்குச் செல்வோம்.

தேங்காய்ப்பால் சாதம்(குஸ்கா)
தேவையான பொருட்கள்;-

பாசுமதி அரிசி - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் ,கிராம்பு,பட்டை - தலா 3 எண்ணம் (ஏலக்காயை சிறிது கையால் நசுக்கி போடவும்)
பிரியாணி இலை - 2
வெங்காயம் நறுக்கியது - 1
முந்திரி - 5
பச்சை மிளகாய் கீறியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் குவியலாக
தேங்காய்ப்பால் - 1 கப் & தண்ணீர் 1 கப்
உப்பு - தேவைக்கு.


செய்முறை:-
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பாசுமதி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் சூடு செய்து ஏலம் ,பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை சேர்க்கவும்.முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.
அடுத்து ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து விட்டு, சேர்த்து வதக்கவும்.

தேங்காயப்பால், தண்ணீர் உப்பு சேர்க்கவும்.
லேசாக கொதிவரவும் மூடி போட்டு, சாதம்  வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து பிரட்டிப் பரிமாறவும்.
இதனை ஆட்டோமெடிக்  ரைஸ் குக்கரில் தாளித்து அரிசி முதல் அனைத்து பொருட்களும் சேர்த்து சூடு ஆனவுடன் 10 நிமிடம் வைத்தும் எடுக்கலாம். அல்லது  குக்கரில் கூட இரண்டு விசில் வைத்தும் எடுக்கலாம்.


 சிக்கன் அல்லது மட்டன் கிரேவியுடன் பரிமாறினால மிக அருமையாக இருக்கும்.
இந்த முறை தன்னுடைய அம்மாவின் பக்குவம் என்கிறார் தில்லி ராணி. தன்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே  அவர் விரும்பி உண்ணும்
மிக  விருப்பமான காம்பினேஷன் என்றும் குறிப்பிடுகிறார்.

இனி இதற்கு பொருத்தமான சிக்கன் கறி குறிப்பைப் பார்ப்போம்.

சிக்கன் பெப்பர் கறி:
தேவையான பொருட்கள்;-
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 1 நறுக்கியது.
மசாலாவிற்கு  வறுத்து அரைக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலம் - 3
கிராம்பு - 3-5
பிரியாணி இலை - 1
மராட்டி மொக்கு - 1
ஜாதி பத்திரி - பாதி
கல் பாசி - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன் குவியலாக (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 2 இஞ்ச் துண்டு
பூண்டு - 10
தக்காளி - சிறியது -1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

மசாலாப் பொடி தேவையானவை:-
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - அரைடீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க ஏலம்,பட்டை,கிராம்பு,சோம்பு,கருவேப்பிலை.
செய்முறை:-

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். சிக்கனை கால் கப் தயிர், சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

மசாலாவை மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
பின்பு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சிக்கன் தாளிக்க தேவைக்கு எண்ணெய், சிறு துண்டு பட்டை, 2 கிராம்பு, சிறிது சோம்பு, கருவேப்பிலை, நறுக்கிய  வெங்காயம் ஒன்று எடுத்து வைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,சோம்பு, கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் ஊறிய சிக்கன் சேர்க்கவும். சிக்கனிலேயே தண்ணீர் ஊறும்.பிரட்டி விட்டு வேக விடவும்.
மசாலா பொடி வகைகள் சேர்க்கவும். அரைத்த மசாலா சேர்த்து பிரட்டி தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
வெந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான கமகமக்கும்  சிக்கன் பெப்பர் கறி தயார்.
இதனை தேங்காய்ப்பால் சாதம் அல்லது
 குஸ்காவுடன் பரிமாற அசத்தலாக இருக்கும்.
நீங்களும் இந்த முறைப்படி செய்து பாருங்க. திருமதி.தில்லி ராணி தன்னுடைய சமையலில் வீட்டில் அனைவரும் விரும்பக்கூடிய இந்தகுறிப்புக்களை பகிர்ந்திருக்கிறார்.
டிப்ஸ்;
இதே முறையில் புல்கிரீம் மில்க் கால் கப் சேர்த்து மீதிக்கு தண்ணீர் சேர்த்தும்  இந்த முறையில்  செய்தாலும் மிக அருமையாக இருக்கும்.
இதே முறையில் மல்லி,புதினா சேர்த்து இஞ்சி பூண்டோடு வதக்கியும் செய்யலாம்.ஒரு சிறிய தக்காளி சேர்த்து லேசாக வதக்கலாம். கால் கப் தேங்காய்ப்பால், முக்கால் கப் தண்ணீர் சேர்த்தும் இந்த சாதம்
 செய்யலாம்.
இவர் ஆங்கிலத்தில் அனுப்பிய குறிப்பை நான் தமிழ் படுத்தி பகிர்ந்திருக்கிறேன்.

 இந்தஅருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி. சிரமம் பாராது மிகத் தெளிவாய்  படங்கள் எடுத்து சிறப்பாக பகிர்ந்த விதம் மிக அசத்தல். பகிர்வுகள் அனைவரையும் நாவூறச் செய்யும் என்பதில் ஐயமில்லை,  நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை மீண்டும்  நம் அனைவர் சார்பாகவும் திருமதி.தில்லி ராணிக்கு  தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து ஒரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் மீண்டும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்..

3 comments:

பரிவை சே.குமார் said...

வித்தியாசமாய் சிக்கன் பெப்பர் கறி...
அது என்னக்கா மராட்டி மொக்கு....?

Asiya Omar said...

Varukaikku makilchi.pepper curry seymuraiyil muthal padaththil thattil karuppaa siRiya kuchi maathiri iruppathu thaan maraati mokku.

sangeethas creations said...

அருமை ...வழக்கம் போல படங்களுடன் விளக்கமும் அருமை ... திருமதி .தில்லி ராணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ..
http://snowwhitesona.blogspot.in/