Saturday, September 3, 2016

ஃபலூடா / Falooda



தேவையான பொருட்கள்;-
சேமியா - 50 கிராம்
அரை லிட்டர் கெட்டியான பாலில் தேவைக்கு சீனி  சேர்த்து சேமியாவை வேக வைத்து எடுக்கவும். கெட்டியாக பாயாசம் போல் இருக்க வேண்டும்..

பாதாம் பிசின் சிறிய துண்டு 3 அல்லது நான்கு எடுத்து முதல் நாளே ஊற வைத்து வைக்கவும். சப்ஜா அல்லது சியா சீட்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைக்கவும்.
பொடியாக நருக்கி வறுத்த நட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி தயாராக இருக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த ஃப்லேவரில் ஜெல்லி  அல்லது கடற்பாசி  செய்து தயார் நிலையில் இருக்கட்டும். நான் ரூஹாஃப்சா ப்லேவரில் செய்தேன்.பழங்கள் பொடியாக நறுக்கி வைக்கவும்.அது இன்னும் ரிச்சாக இருக்க கஸ்டர்டில் கலந்தும் வைக்கலாம்.
முதலில் ஒரு உயர ஜூஸ் டம்ளர் அல்லது டெஸர்ட் பவுலில் சேமியா எடுக்கவும்.உங்க விருப்பம் தான்.
நன்னாரி சிரப்பில் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்க்கவும்.
ஊறிய சப்ஜா சேர்க்கவும்.
கஸ்டர்ட் மிக்ஸ் செய்த ஃப்ரூட்ஸ் சேர்க்கவும்.
ஜெல்லி சேர்க்கவும்.
மீண்டும் சப்ஜா சேர்க்கலாம்.

மேலே ஐஸ்கிரீம் வெனிலா அல்லது குல்பி  அல்லது ஸ்டராபெர்ரி அல்லது விரும்பிய ஐஸ்கிரீம் வைக்கலாம். எல்லாம் உங்க டேஸ்ட் தான்.
பரிமாறி அசத்துங்க.
முன்பே என் ஃபேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்தாயிற்று. நோன்பில் செய்து பரிமாறியது.தற்சமயம் தான் இங்கு போஸ்டிங்  போட முடிந்தது. எஞ்சாய் !

3 comments:

priyasaki said...

அசத்தல் ஆசியா. கலர்புல். பார்க்கவே சாப்பிடனும் போல. நன்னாரி சிரப் லா ஊறவிடனும்.

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் நிறைய கிடைக்கும்.... சாப்பிட்டதுண்டு.

துளசி கோபால் said...

ஒரு காலத்தில் மெட்ராஸ் மெரினாவில் புஹாரி ஹொட்டேல் இருந்தப்ப ஃபலூடா சாப்புடவே கிளம்பிப்போவோம்.

இப்ப வீட்டில்தான் எப்பவாவது செய்யறேன். ஃபலூடா மிக்ஸ்ன்னு ஒன்னு கிடைக்குது இங்கே.