Tuesday, September 6, 2016

மட்டன் சாப்ஸ் ப்ரை / Mutton chops fry


தேவையான பொருட்கள்;-
கறி வேக வைக்க:-
ஆட்டு விலா எலும்புத் துண்டுகள் ( மட்டன் ரிப்ஸ்) - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது -  1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகம், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது.
விரும்பினால் ஒரு வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
உப்பு -தேவைக்கு.
எல்லாம் சேர்த்து விரவி அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
டிப் செய்து பொரிக்க:
முட்டை - 2
உப்பு -  தேவைப்பட்டால் சிறிது. கறியில் உப்பு இருக்கும். 
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :-
ஊறிய மட்டன் துண்டுகளை குக்கரில் வைத்து 3 அல்லது நான்கு விசில் வேக வைத்து  எடுக்கவும். ஊறி இருக்கும் தண்ணீர் எல்லாம் வற்ற வைக்க வேண்டும்.மசாலா வெங்காயம் தக்காளி எல்லாம் கறி ஒட்டினாற் போல் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். வெந்த மட்டன் துண்டுகள் ஆற வேண்டும்.

இதற்கிடையில் முட்டை, உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு சூடானவுடன்  வெந்த மட்டன் துண்டுகளை முட்டையில் முக்கி  எடுத்துப் போடவும். இரு பக்கமும் பொன்னிறமாக சிவற பொரித்து எடுக்கவும்.

சுவையான மட்டன் சாப்ஸ் ஃப்ரை ரெடி. எங்க ஊர் பக்கம்  மிளகாய்த்தூள்,கரம் மசாலா,ஊர் மசாலா சேர்த்து சாப்ஸ் கூட்டு மாதிரியும் வைப்போம், அல்லது சாப்ஸ் ஃப்ரை இப்படி முட்டையில் டிப் செய்து ஃப்ரை செய்தும் எடுப்போம்.
நான் இங்கு தனித்தனியாக எல்லா மசாலாவும் சேர்த்து செய்து காட்டியிருக்கிறேன்.
இதனை சிறப்பு விருந்தினர் பகிர்வில் திருமதி ஹமீதா ஹாரிஸ் எங்க ஊர்  முறைப்படி  மசாலா சேர்த்து செய்து காட்டியிருக்கிறார். கிளிக் செய்து பார்க்கவும்.

No comments: