Saturday, September 3, 2016

நண்டு உதிர்த்தது/ நண்டு புட்டு / Shredded crab / Crab puttu



தேவையான பொருட்கள்;-
நண்டு ஸ்டிக்ஸ் - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தட்டிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு,சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லி, கருவேப்பிலை.
எலுமிச்சை ஜூஸ் - சிறிது.
(தேங்காய் துருவல் கூட சேர்க்கலாம்.)

ரெடி டூ குக் நண்டு ஸ்டிக்ஸ் கிடைக்கிறது. அதனை வாங்கி உப்பு மஞ்சத்தூள், வினிகர் பிரட்டி அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.



சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.உப்பு, வீட்டு மசாலா சிறிது விரும்பினால் போட்டு பிரட்டி வைக்கலாம்.
கடாயில் எண்ணெய் விடவும்.தட்டிய பூண்டு சேர்க்கவும். விரும்பினால் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்றாக பிரட்டி வேக விடவும்.பிரட்டும் போதே உதிர்ந்து விடும்.
அதில் மேல் குறிப்பிட்ட மசால் தூள் வகைகள் சேர்க்கவும். தேவைக்கு உப்பு கொஞ்சம் சேர்க்கவும்.
நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.
நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
செமையான நண்டு உதிர்த்தது/ நண்டு புட்டு தயார்.அப்படியே சாப்பிடலாம்.சிறிது லெமன் ஜூஸ் சேர்க்கலாம்.
டிப்ஸ்:
இதனை  ஸ்டஃபிங்க்ஸ்கு பயன் படுத்தலாம்.உருளைக்கிழங்கு சேர்த்து கட்லெட் செய்யலாம்.இதனுடன் வடித்த பாசுமதி அரிசி சேர்த்தால் நண்டு ஃப்ரைட் ரைஸ் ரெடி. ஸ்டிக்ஸ் கட் செய்து சாலட், ஸீ புட் சூப்பிலும் சேர்க்கலாம்.அப்படியே மசாலாவில் பிரட்டி, முட்டையில் டிப் செய்து,,ப்ரெட்கிரம்ஸ் பிரட்டி ஸ்டிக்ஸ்  மாதிரி பொரித்தும் எடுக்கலாம்.




No comments: