Wednesday, September 28, 2016

கிராமத்து மீன் குழம்பு / Village style fish curry

 
தேவையான பொருட்கள்;
ஆற்று அல்லது குளத்து மீன் - அரைக் கிலோ
உப்பு ,மஞ்சள் தூள் - தேவைக்கு
மீனை  சுத்தம் செய்து நன்கு அலசி உப்பு  மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.
வறுத்து அரைக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
முழு மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
வெந்தயம் - கால் டீஸ்பூன் 
கடலை பருப்பு - 1டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - பெரியது அல்லது சின்ன வெங்காயம்- 100 கிராம்
பூண்டு - 5 பல் பெரியது அல்லது சிறிய  நாட்டு பூண்டு  என்றால் 10 பல்.

(கடலை பருப்பு, அரிசி சேர்ப்பதால் தேங்காய் சேர்க்க தேவையில்லை. குழம்பு கெட்டியாக இருக்கும்.)
மீன் குழம்பு தாளிக்க:-
நல்ல எண்ணெய்  - 3 - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - அரை டீஸ்பூன்
கீரிய பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய மல்லி இலை - சிறிது
புளிக்கரைசல் - எலுமிச்சை அளவு
அதில் பிணைந்து கொள்ள தக்காளி - 100 கிராம் பழுத்தது.

செய்முறை:-


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வறுத்து ஆற விடவும்.


மிக்சி அல்லது அம்மியில் நல்ல நைசாக முதலில் அரைத்து பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

புளியுடன் தக்காளியை பிணைந்து சிறிது உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
ஒரு மீன் குழம்பு வைக்க ஏதுவான மண் சட்டியில் எண்ணெய் விட்டு சூடான வுடன் கடுகு,வெந்தயம் போடவும். கடுகு வெடிக்கவும், மிளகாய்,கருவேப்பிலை சேர்க்கவும்.

அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

 தக்காளி,புளிக்கரைசல் சேர்க்கவும்.

நன்கு கொதித்து புளி வாடை மடங்க வேண்டும்.
மீன் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
மூடி போட்டு,  அடுப்பை மீடியமாக வைத்து  5-10 நிமிடம் வேக விடவும்.
மீன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவலாம்.
அரை அல்லது ஒரு  மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.
மறுநாள் சுண்ட வைத்து சாப்பிட மிக அபாரமாக இருக்கும்.

No comments: