Saturday, October 15, 2016

ஓட்ஸ் லட்டு -2 / Oats Ladoo -2 / Oats balls


தேவையான பொருட்கள்;-
ஓட்ஸ் - அரைக்கிலோ
துருவிய தேங்காய் - 2 கப்
சீனி அல்லது ப்ரவுன் சுகர் - ஒரு கப்
ஏலக்காய் - 8
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் - 50 கிராம்
பேரீச்சை - 150-200 கிராம்
நெய் - 200  மில்லி
விரும்பினால் பாதாம்,பிஸ்தா பருப்பும் சிறிது சேர்க்கலாம்.
செய்முறை:-
ஓட்ஸ்,தேங்காய் தனி தனியாக லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,


இரண்டையும் ஒன்று சேர்க்கவும்.

முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்.விரும்பினால் பாதாம்,பிஸ்தாவும் சிறிது சேர்க்கலாம்.
அத்துடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்க்கவும்.

ஒரு சேர பிரட்டி கலந்து ஆற வைக்கவும்.

ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும்.இப்படியே முழுவதையும் போட்டு பொடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
சீனியை ஏலக்காய் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்த சீனிப்பாகில் பொடித்த ஓட்ஸ் நட்ஸ் டேட்ஸ் மிக்ஸ் சேர்க்கவும்.
பிரட்டி விட்டு நெய் சேர்த்து நன்கு கலந்து  உருண்டைகளாக பிடிக்கவும்.
ஓட்ஸ் லட்டு தயார். செய்து பாருங்க.

நெய் மணத்துடன் செமையாக இருக்கும்.

6 comments:

கோமதி அரசு said...

சூப்பராக இருக்கிறது ஓட்ஸ் லட்டு.

பரிவை சே.குமார் said...

ஓட்ஸ் லட்டா... ஆஹா சூப்பரா இருக்கே அக்கா...

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நன்றாக இருக்கிறது. சாப்பிட்டும் பார்க்க வேண்டும்!

Asiya Omar said...

என் உறவினர் வீட்டுக்கு செய்து எடுத்துச் சென்றேன். ரொம்ப அருமை என்றதால் மீண்டும் செய்து அனுப்பினேன்.
செய்து பாருங்க. சாப்பிட்டால் ஒன்றோடு நிறுத்த முடியாது. சகோ.

Mahi said...

Easy and healthy sweet!!

sangeethas creations said...

சுவையான ஆரோக்கியமான லட்டு ..