Wednesday, October 12, 2016

ஊதா முட்டை கோஸ் பொரியல் - 2 / Purple cabbage stir fry - 2



தேவையான பொருட்கள்:- 
ஊதா முட்டைகோஸ், சாதா கோஸ் - இரண்டும் கால் கிலோ
எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 -2 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய  வெங்காயம் - 1
துருவிய தேங்காய்  3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


முட்டை கோஸ் பொடியாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து சவைக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு,கடுகு,உ.பருப்பு,இஞ்சி,பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
 சிறிது நேரம் கழித்து கோஸ், தேவைக்கு உப்பு சேர்த்து மூடி போட்டு வதங்க விடவும்.
 வதங்கியவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டவும்..
 சுவையான ஊதா கோஸ் பொரியல் ரெடி.

5 comments:

Jaleela Kamal said...

ஹெல்தி பொரியல்

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு. நன்றி.

Mahi said...

2 முட்டைக்கோஸையும் சேர்த்து சமைத்ததுக்கு எதாவது ஸ்பெஷல் காரணம்?? நான் தனித்தனியா பொரியல் செய்வேன்..அதான், டவுட்டு! ;) :)

Asiya Omar said...

சும்மா ஒரு மாற்றம். ஊதா கோஸ் மட்டும் சேர்த்து செய்தால் கலர் ரொம்ப டார்க். வெள்ளை சேர்த்து செய்யும் பொழுது பார்க்க கொஞ்சம் ரம்யமாய்.

Mahi said...

:) okay..will try to mix them soon!