Tuesday, October 18, 2016

ஏர் ஃப்ரைட் மட்டன் ஷீக் கபாப் / Air fried Mutton sheekh kebab

 தேவையான பொருட்கள் :
மட்டன்  அல்லது பீஃப் கொத்துக்கறி  -அரைக்கிலோ
பெரிய வெங்காயம் பொடியாக சாப் செய்தது - 2
முட்டை - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு அல்லது பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்,  மிளகுத்தூள்- அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்  -  டீஸ்பூன்
சீரகம், சோம்புத்தூள் -  தலா அரை  டீஸ்பூன்
முந்திரி பருப்பு பவுடர்  விரும்பினால் - ஒரு டேபிள்ஸ்பூன்
சேர்க்கலாம்.
கபாப் மிக் ஸ் இளக்கமாக இருந்தால் கார்ன்ப்லோர் அல்லது பொட்டுக் கடலை பொடித்தது அல்லது ஒரு ஸ்லைஸ் ப்ரெட் , இதில் ஏதாவது ஒன்று சேர்த்து  கலந்து கொள்ளலாம். இது டிப்ஸ் தான். நான் எதுவும் சேர்க்கவில்லை.கீமா முட்டை மிக்ஸ் மட்டும்  தான்.
நறுக்கிய மல்லி புதினா சிறிது.
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது பட்டர் மேலே ப்ரெஷ் செய்ய.
உப்பு - தேவைக்கு

செய்முறை:-
முதலில் மட்டன் கீமாவை நன்கு அலசி தண்ணீர் சுத்தமாக வடித்து வைக்கவும்.
வெங்காயத்தை சாப் செய்து தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் மட்டன் கீமா ,வெங்காயம், முட்டை மேற்சொன்ன மசாலா பொருட்கள், நறுக்கிய மல்லி, புதினா தேவைக்கு உப்பு   சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ப்லெண்ட் செய்து எடுக்கவும்.
அதனை ஃப்ரிட்ஜில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்பு மட்டன் கீமா மிக்ஸ் வெளியே எடுத்து வைக்கவும்.
ஏர் ஃப்ரையரை  180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

பின்பு பெரிய எலுமிச்சை அளவு உருண்டை கீமா மிக்ஸ் எடுத்து  கபாப் கம்பியில் நீள்வாக்கில் கையால் உருட்டி பிடிக்கவும்.
 பின்பு ஃப்ரையர் ஸ்டாண்டில் அடுக்கவும்.
10 நிமிடம் முதலில் வைக்கவும்.
திறந்து கபாப் கம்பியை  திருப்பி வைக்கவும். கம்பி சுடும் .கவனமாக திருப்பி வைக்கவும்.
மீண்டும் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். மேலே பட்டர் அல்லது ஆலிவ் ஆயில் தடவவும்.


 வெளியே வைத்து சிறிது ஆறியவுடன் கபாபை உடனே உருவி எடுக்காமல் ஒரு திருப்பு திருப்பி விட்டு உருவினால் உடையாமல் வரும்.
விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும். புதினா தயிர் சேர்த்து செய்த சட்னியுடன்  சாப்பிட சூப்பராக இருக்கும்..நான் இங்கு கார்லிக் பேஸ்ட் உடன் பரிமாறியுள்ளேன்.
15- 18  கபாப் வரும்.

1 comment:

பரிவை சே.குமார் said...

படங்களுடன் விளக்கமாய்...
இதெல்லாம் பார்த்து ரசிக்கத்தான் முடியும் அக்கா...
பாக்கும் போதே தெரியுது சூப்பரா இருக்கும்ன்னு....