Thursday, October 20, 2016

ஏர் ப்ரைட் சீடை / Air fried seedai


தேவையான பொருட்கள்;-
ரெடி மேட் அரிசி மாவு ( கடையில் வாங்கியது) - 2 கப்
பச்சை மிளகாய்  விழுது -  3
தண்ணீர் -ஒன்றரை கப்
பட்டர்  அல்லது எண்ணெய்- 1  -2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
வறுத்த எள்ளு - 2 டேபிள்ஸ்பூன் ( விரும்பினால்)
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பச்சை மிளகாய் விழுது, உப்பு, பட்டர், பெருங்காயப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
அந்த மாவின் மீது கொதித்த நீரை வடிகட்டவும்.வடிகட்டினால் பச்சை மிளகாயுள்ள தோல் விதை மாவில் கலக்காமல் காரம் மட்டும் இருக்கும். உப்பு சரிபார்க்கவும்.
மாவுடன் வறுத்த எள் சேர்க்கவும்.
மாவை நன்கு விரவி ,மசித்து வைத்துக் கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். கையில் எண்ணெய்  தொட்டுக் கொண்டு உருட்டவும்.

ஏர் ஃப்ரையர் கூடையில் சிறிது எண்ணெய் தடவி  உருண்டைகளை  போடவும்.
முற்சூடு செய்யவும். 180 டிகிரியில் முதலில் 15 நிமிடம் வைக்கவும். இடை இடையே குலுக்கி விடவும்.
எடுத்து சரி பார்த்து விட்டு மீண்டும் 15 நிமிடம் செட் செய்யவும். மொத்தம் 30 நிமிடம்  ஆகும்.
கர கர மொறு மொறு  சீடை ரெடி.
எண்ணெயிலும் கொஞ்சம் போட்டு பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.

அதுவும் பக்குவமாக வந்தது.


ஆனால் ஏர்ஃப்ரைட் சீடை தான் செமையாக இருந்தது.
நீங்களும் பிடிச்சிருந்தால் செய்து பாருங்க.
ரெசிப்பி ஏர் ஃப்ரை  ஐடியா : நன்றி திருமதி சுபாஷிணி வெங்கடேஷ், திருமதி. ஹசீனா செய்யது.

3 comments:

கோமதி அரசு said...

உளுந்து மாவு இல்லாமல் சீடை அருமையாக இருக்கே!

Asiya Omar said...

கோமதிக்கா எனக்கே நம்ப முடியலை நான் தான் செய்தேன் என்று. செமை.

Jaleela Kamal said...

அருமை