Tuesday, October 25, 2016

மட்டன் கோலா உருண்டை குழம்பு / Mutton kofta curry

தேவையான பொருட்கள்;-
உருண்டை பிடிக்க:-
மட்டன் கொத்துக்கறி - கால் கிலோ
பொடியாக சாப் செய்து பிழிந்த பெரிய வெங்காயம் - 1
பொடித்த பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
கறி மசாலா - 1  டீஸ்பூன்
சுவைக்கு சிறிது உப்பு.
இனி உருண்டை குழம்பு செய்ய தேவையானவை:-
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
சோம்பு  1/2 டீஸ்பூன், ஏலம்,கிராம்பு -தலா இரண்டு .சிறிய துண்டு பட்டை
(பொடித்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
மிளகாய்த்தூள் - அரை அல்லது 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 அல்லது 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை அல்லது 1 டீஸ்பூன்
( அல்லது என்று சொல்வதற்கு காரணம் மசாலா ஒர் சிலர் மைல்டாக ,பலர் தூக்கலாக கேட்பார்கள்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி, புதினா  இலை - சிறிது.
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4.

செய்முறை:-
கறியை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.


வெங்காயத்தை பொடியாக சாப் செய்து தன்ணீர் பிழிந்து வைக்கவும். அந்த தண்ணீரை உருண்டை வேகும் பொழுது சேர்க்கலாம்.
கறியுடன், வெங்காயம், கறிமசாலா,சிறிது உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
அத்துடன் பொட்டுக்கடலை பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறிய அளவு எலுமிச்சை உருண்டைகளாக பிடிக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடித்த கரம் மசாலாவில் முக்கால் பாகம் போடவும்.பச்சை மிளகாய் கீரி சேர்க்கவும்.வதக்கவும்.
நறுக்கிய தக்காளி,சிறிது உப்பு போட்டு மூடி வதங்க விடவும்.

மூடியை திறந்து குறிப்பிட்ட  மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
2 அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதி வர வேண்டும்.
உருண்டைகளைப் போடவும்.

மூடி போட்டு அடுப்பைக் குறைத்து கால் மணி நேரம் வேக விடவும்.
திறந்து மட்டன் கோலா  உருண்டைகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி புதினா இலை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்கட்டும்.
விரும்பினால் பொடித்த கரம் மசாலாவில் சிறிது மேலே தூவி விட்டு கலந்து விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் மேலே வரும். இந்நேரம் அடுப்பை அணைக்கவும்.
சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு ரெடி.
இதனை வெரும் சோறு அல்லது நெய் சோறு, சப்பாத்தி அல்லது பரோட்டா, ஆப்பம், இட்லி,தோசை,அரிசி மாவு ரொட்டி இப்படி எது கூட வேண்டுமானாலும் பரிமாறலாம்.

No comments: