Friday, October 21, 2016

ஓட்ஸ் ஊத்தப்பம் / Oats uuthappam


தேவையான பொருட்கள்;-
லேசாக வறுத்து பொடித்த ஓட்ஸ் - 1 கப்
இட்லி அல்லது தோசை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய  வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய  மிளகாய் - 1- 2
கொத்தமல்லி ,கருவேப்பிலை பொடியாக நறுக்கியது - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது.
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
பொடித்த ஓட்ஸ், தோசை மாவு , எண்ணெய் தவிர மேற் சொன்ன அனைத்து பொருட்களும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் உப்பு சேர்க்கவும்.

 ஊத்தம்ப்பம் தவாவில் சிறிது எண்ணெய் தடவி டிஸ்யு பேப்பரால் துடைத்து விட்டு சிறிய குழிக்கரண்டி அளவு எடுத்து பரத்தி விடவும்.
 மேலே சிறிது எண்ணெய் தெளித்து மூடி வைக்கவும்.
 திறந்து மேற்பகுதியும் வெந்த மாதிரி வந்தவுடன் திருப்பவும்.

இரு புறமும் வெந்து தயாரானவுடன் திருப்பி எடுக்கவும்.
 சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் தயார். 
தேங்காய் சட்னியுடன் அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.



ஒட்ஸ் ஊத்தப்பம் இப்படி  சும்மா வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லி, கருவேப்பிலை சேர்த்தும் செய்யலாம். அல்லது பொடியாக நறுக்கிய காய்கறிகள் நறுக்கி வதக்கி செய்தாலும் சூப்பராக இருக்கும். இங்கு சிம்பிளாக மீதமான இட்லி தோசை மாவு வைத்து செய்து காட்டியிருக்கேன். இத்துடன் ரவை சேர்த்து ரவா தோசை மாதிரியும் செய்யலாம்.மிளகு சீரகம் தட்டிப் போடனும்.   அதனை இளக்கமாகக் கரைத்து மெலிதாக மொறு மொறுன்னு சுடனும். 

No comments: