Saturday, November 19, 2016

கோங்கூரா பப்பு / Gongura Pappu


தேவையான பொருட்கள்;-
புளிச்சக்கீரை - 2 கப்
துவரம்   பருப்பு - 100 கிராம்
 நல்ல  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய  பச்சை மிளகாய் -  4
பூண்டு - 5 பல்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-

வீட்டுப்பக்கம் ஃப்ரெஷாக வாக்கிங் போகும் பொழுது பறித்து வந்தேன்.

 புளிச்சக்கீரையை காம்பு நீக்கி அலசி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 பருப்பை ஊற வைத்து, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து  குக்கரில் இரண்டு விசில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானவுடன் கடுகு,சீரகம்,உ.பருப்பு வற்றல் போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு  போட்டு
நன்கு வதக்கவும்.
கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
கீரையே புளிக்கும். தக்காளியோ புளியோ சேர்க்க தேவையில்லை.

கீரை நன்கு வெந்து மசிந்ததும், பருப்பு சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும்.ஒரு டீஸ்பூன் நெய் மேலே விடவும்.


சுவையான கோங்கூரா  பப்பு தயார்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
அப்பளம் பொரித்தோ அல்லது  ஏதாவது ஃப்ரை அயிட்டமுடன் பரிமாறவும்.

3 comments:

middleclassmadhavi said...

Paarkum podhe sappida thonrugiradhu!!
Enna paruppu upayogicha rusi nalla irukkum?

Asiya Omar said...

துவரம் பருப்பு மாதவி. ஆனால் கீரை எனக்கு கொஞ்சம் நல்லவே புளிப்பாக தெரிந்தது.
இங்கே விளைந்தது. பக்கத்தில் காடு மாதிரி வளர்ந்து கிடக்கிறது.வாக்கிங் போகும் பொழுது பறித்து வந்தேன்.வெரைட்டியாக குறிப்பு இதை வைத்து செய்யனும் என்று ஆசை.ஆனால் சாப்பிடத்தான் ஆட்கள் இல்லை.புளிப்பு பிடிக்கிறவங்களுக்கு இது சூப்பராக இருக்கும்.தொக்கு மாதிரி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

middleclassmadhavi said...

தாங்க்ஸ்!! :-)))