Sunday, December 4, 2016

சைவத்திற்கு கோங்கூரா பனீர் & அசைவத்திற்கு கோங்கூரா முட்டை :-

முதலில்  முட்டையை வேகவைத்து தோல் எடுத்து கட் செய்து வைக்கவும்.
பனீர் என்றால் லேசாக எண்ணெயில் ரோஸ்ட் செய்து வைக்கவும்.
இனி எப்படி செய்வது?



தே.பொ:-
முதலில் கீரையை வதக்கி வேக வைக்க:
நல்ல எண்ணெய் – 2 டீஸ்பூன்
சுத்தம் செய்து அலசி, நறுக்கிய புளிச்சக்கீரை – 2 கையளவு
இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 2 ( காரத்திற்கேற்ப)
வெங்காயம் -1
உப்பு – சிறிது.
ஆறிய பின்பு  லேசாக அரைத்து எடுக்கவும்.

வதக்கி அரைத்த கீரை தாளிக்க:- 
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு - சிறிது
மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:-
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய், வெங்காயம் கீரை போட்டு வதக்கி, சிறிது உப்பும் சேர்த்து ஆற விட்டு அரைத்து முதலில் எடுக்கவும்.

பின்பு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து அதில் மசாலா பொருட்கள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

தாளித்த கீரையில் முட்டை அல்லது பனீரை சேர்த்து பிரட்டி விட்டு பரிமாற வேண்டியது தான்.

முட்டை 2 அல்லது நான்கு, பனீர் துண்டுகள் ஒரு கப் அல்லது தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக்கீரை புளிப்பாக இருப்பதால் தனியாக சாப்பிடுவது சற்று சிரமம், எனவே  முட்டை, பனீருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.இது தவிர சிக்கன்,மட்டன் சேர்த்தும் செய்யலாம்.

முக்கியக் குறிப்பு:-
புளிச்சக்கீரையில்,விட்டமின் சத்துக்கள். தாது உப்புக்களுடன்,  இரும்புச்சத்தும் இருக்கிறது. உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்கிறது. காசநோயை குணப்படுத்தும். உடலையும், குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.

இரவில் கீரை எடுப்பது வயிற்று உப்புசம்,வயிற்றுப் பொருமல்,வயிற்று இரைச்சல்  ஒரு சிலருக்கு ஏற்படும். இரவில் கீரை உணவை தவிர்ப்பது நல்லது.

-ஆசியா உமர்.

No comments: