Sunday, December 18, 2016

முருங்கைக்காய் கூட்டு / Drumstick kootu


முருங்கைக்காய் என்றாலே ஊரில் எங்க வீட்டில் காய்க்கும் காய் தான் நினைவிற்கு வரும். இரண்டு அடிக்கும்  மேல் நீளம், சாட்டை  மாதிரி இருக்கும்.டேஸ்ட் செமை. இப்படி கூட்டு வைத்துச் சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான். வீட்டில் பொரியல், பருப்பு முருங்கைக்காய், மீன் முருங்கைக்காய், மட்டன் முருங்கைக்காய்னு செய்வாங்க. ஆனால் எனக்கென்னவோ இந்த கூட்டு தான் பிடிக்கும். முருங்கைக்காய் நிறைய கிடைக்கும் பொழுது இப்படி கூட்டு செய்து ஒரு ப்லேட் நிறைய  கூட சாப்பிடலாம்..
 தேவையான பொருட்கள் ;- 
முருங்கைக்காய் - 4
பெரிய  வெங்காயம் - 2
பூண்டு - 6-8 பல்
பெரிய  தக்காளி- 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க:-
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது.
அரைக்க:- 
4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல்.
கொர கொரப்பாக வெங்காயம் பூண்டு, தக்காளி.
செய்முறை:
முருங்கைக்காயை இரண்டு  அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுதே உரித்தால் வரும் தோலை நீக்கிக் கொள்ளலாம்.
முதலில் வெங்காயம் பூண்டை கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
அடுத்து தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு ,கருவேப்பிலை போட்டு பொரிய விடவும். அடுத்து அரைத்த வெங்காயம் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்..
அடுத்து தக்காளி சேர்த்து ,கீரிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.

மேற் சொன்ன மசாலா பொருட்கள் சேர்க்கவும். நன்கு பிரட்டி வதக்கவும்.


முருங்கைக்காய் சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொர கொரப்பாக அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.
திறந்தால் பக்குவமாக வெந்திருக்கும்.
சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
எடுத்து பக்க உணவாகப் பரிமாறலாம்.
சீசன் சமயம் வாரம் ஒரு முறை இப்படி கூட்டு வைத்துச் சாப்பிடலாம். செமையாக இருக்கும்.

2 comments:

மனோ சாமிநாதன் said...

மிகவும் சுவையான குறிப்பு ஆசியா!!

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி மனோ அக்கா.