Thursday, December 8, 2016

கார்லிக் சீஸ் சிக்கனும் மசித்த உருளைக்கிழங்கும் / Garlic cheese chicken & Mashed potatoes (Air fried)

 தேவையான பொருட்கள்;-
சிக்கன் - 2 சிக்கனின் நெஞ்சுப்பகுதி - நீள் வாக்கில் கட் செய்து கொள்ளவும்.(அரைக்கிலோ)
பட்டர் - அரை கப்
பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் - 6
ப்ரெட் கிரம்ஸ் - ஒரு கப்
செடார் சீஸ் ,மொசரல்லா அல்லது பார்மேசான் சீஸ் - தலா அரை கப்
உப்பு,பொடித்த மிளகு தேவைக்கு.
ஃப்ரெஷ் ஹெர்ப்ஸ் அல்லது ட்ரைட் ஹெர்ப்ஸ் - 1 -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-
சிக்கன் நெஞ்சுப்பகுதியை நீள் வாக்கில் கட் செய்து கொள்ளவும். நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

 செடார் சீஸ்,  துருவிக் கொள்ளவும்.மொசரல்லா சீஸ் துருவியதே இருந்தது.

 ப்ரெட் கிரம்ஸ், உப்பு ,மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய ஃப்ரெஷ் ஒரிகானோ, ரோஸ்மேரி, பேசில்(துளசி) அல்லது பார்ஸ்லி மூன்றையும்  பொடியாக நறுக்கியோ. அல்லது மிக்ஸ்ட் ட்ரைட் ஹெர்ப்ஸ் இருந்தாலும் சேர்க்கவும். கலந்து கொள்ளவும்.


ஒரு சாஸ் பேனில் பட்டர் பொடியாக நறுக்கிய பூண்டு  போட்டு சிம்மில் வைத்து உருக வைக்கவும்.
 உருகிய பட்டர் ஆறியவுடன் சிக்கன் துண்டுகளை டிப் செய்து சீஸ் மிக்ஸில் பிரட்டி தனியே எடுத்து வைக்கவும்.
 இதனை ஏர் ஃப்ரை செய்தும் எடுக்கலாம் அல்லது எலெக்ட்ரிக் ஓவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.
 எனக்கு ஏர் ஃப்ரை ஈசியாக இருந்ததால் அதிலே ஃப்ரை செய்து எடுத்து விட்டேன்.
 220 டிகிரியில்  3 நிமிடம் முற்சூடு செய்யவும். ட்ரேயில் சிக்கனை வைத்து மூடவும். 10 நிமிடம் முதலில் செட் செய்யவும்.
 10 நிமிடம் கழித்து சிக்கன் துண்டுகளை திருப்பி வைக்கவும்.
 மீண்டும் ஐந்து நிமிடம் வைத்து கவனமாக எடுக்கவும்.
 ஏர் ஃப்ரைட் கார்லிக் சீஸ் சிக்கன்  தயார்.
 மசித்த உருளைக்கிழங்குடன் பரிமாறவும்.
மசித்த உருளை செய்ய:-
முதலில் முன்னூறு அல்லது நானூறு கிராம் உருளையை தோல் எடுத்து நறுக்கி வேக வைக்கவும்.
 அதனை நன்கு மசிக்கவும்.

இதற்கிடையில் 2 டீஸ்பூன் பட்டர் விட்டு ஃப்ரெஷ் கிரீம் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து, பால் 50மில்லி சேர்த்து ஒரு பேனில் கொதிக்க வைக்கவும்.

 பால் ஆறியவுடன் மசித்த உருளையில் சேர்க்கவும்.உப்பு ,பொடித்த மிளகு சேர்க்கவும்.
நன்கு மசித்துப் பரிமாறவும்.
இனி எலக்ட்ரிக் ஓவனில் எப்படி பேக் செய்து எடுப்பது என்று பார்ப்போம்.
மேற்சொன்னபடி   தயார் செய்த சிக்கன் துண்டுகளை அதே போல் 220 டிகிரி செட் செய்து மேலும் கீழும் ப்லேம் வைத்து 15 -20  நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

சுவையான கார்லிக் சீஸ் சிக்கன் தயார்.
சும்மாவே சாப்பிடலாம். ரொம்ப ரிச்சாக இருக்கும். சீஸ் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆரோக்கியமானதும் கூட. பிடித்திருந்தால் செய்து பாருங்க.
மகள் விடுமுறையில் வந்த பொழுது முயற்சி செய்த ரெசிப்பி. செமையாக இருந்தது.

1 comment:

பரிவை சே.குமார் said...

வாவ்... சூப்பர் அக்கா...