Monday, December 12, 2016

ஓரியோ சீஸ் கேக் பைட்ஸ் / Oreo cheese cake bites


தேவையான பொருட்கள்;-
ஓரியோ பிஸ்கட்ஸ் - 18-  24 (தேவைக்கு)
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
கிரீம்  சீஸ் - 400 - 500 கிராம்
பால் - அரை கப்
ஜெலடின் - 1 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1டீஸ்பூன்
சீனி (கேஸ்டர் சுகர்) - கால் கப்


செய்முறை:-
கீரீம் சீஸ், ஓரியோ பிஸ்கட்  இந்த இரண்டும்  தான் முக்கியம் இந்த ரெசிபிக்கு.

 முதலில் ஓரியோ பிஸ்கட்டை எடுத்து ட்விஸ்ட் செய்யவும். அதனை ஈசியாக பிரிக்கலாம்.பின்பு கத்தி வைத்து வழித்து எடுத்தால் கிரீம் தனியாக வந்து விடும். கிரீம் வேறு பிஸ்கட் வேறு தனித்தனியாக வைக்கவும்.
 எடுத்து வைத்த பிஸ்கட்டை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் கூட ஈசியாக பொடித்து விடலாம். அத்துடன் உருக்கிய பட்டர் சேர்த்து ஒரு பவுலில் கலந்து வைக்கவும்.
அரைகப் வெது வெதுப்பான பாலில் ஜெலடினை நன்கு கரைத்து வைக்கவும்.
 ஒரு பாத்திரத்தை அடுப்பைல் வைத்து சீஸ், சீனி,வெனிலா எசன்ஸ்,பிஸ்கட்டில் இருந்து பிரித்து எடுத்த கிரீம், ஜெலட்டின் கலந்த பால் கலந்து வைக்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
 இதற்கிடையில் பேப்பர் கப்பில் பொடித்த ஓரியோ பிஸ்கட்டை அரை கப் போட்டு நன்கு அமுக்கி செட் செய்து எத்தனை கப் வருமோ அத்த்னை கப் தயார் செய்து வைக்கவும். எனக்கு இருபது கப் வந்தது.சிறிது பிஸ்கட் பொடித்ததை தனியே மேலே தூவ எடுத்து வைக்கவும்.
 பிஸ்கட் பொடி மீது தயார் செய்த சீஸ் மிக்ஸ் மேலே விடவும்.
அதன் சிறிது பிஸ்கட் பொடித்தது தூவவும்.
 அதனை கப் கேக் மோல்டில் வைத்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மணி நேரம் செட் செய்யவும்.
பின்பு எடுத்துப் பரிமாறவும். இது புட்டிங் போல் இருக்கும். பேக் செய்ய வேண்டாம்.
பார்ட்டி சமயம் இதுவும் ஒரு இனிப்பாகப்  பரிமாறலாம்.
இந்த சீஸ் அயிட்டம் வைத்து செய்யும் ரெசிப்பி எல்லாம் என் மகளின் கைவண்ணத்தில் உருவாகுபவை. நான் சும்மா வேடிக்கை பார்ப்பதோடு சரி.
யம்மி ஓரியோ சீஸ் கேக் பைட்ஸ் தயார்.

நீங்களும் பிடித்திருந்தால் செய்து பார்க்கலாம். மகள் விடுமுறையில் வந்த பொழுது முயற்சி செய்தவை.

No comments: