Saturday, March 19, 2016

சிக்கன் பாங்கா / Chicken Banga

  
தேவையான பொருட்கள்;
கிரீமி பேஸ்ட் அரைக்க தேவையானவை:
முந்திரி- அரை கப்
பாதாம், பிஸ்தா பருப்பு  தலா - 2 டேபிள்ஸ்பூன்
ஊற வைத்து மையாக அரைத்து எடுக்கவும்.


மசாலாவிற்கு:
சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை மிளகு - 3 டேபிள்ஸ்பூன்
வறுத்து ஆற விட்டு பொடி செய்து கொள்ளவும் அத்துடன் 
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
சேர்த்து,சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.

சிக்கன்  துண்டுகள் - முக்கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 3/4 கப் - 1 கப்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி,புதினா அலங்கரிக்க

செய்முறை:-

 சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
தேங்காய்ப்பால் எடுத்தும் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விடவும். சூடானவுடன் சிக்கன் சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
 சிக்கன் பாதி வெந்து வரட்டும்.
 

பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.

 நன்கு பிரட்டி விட்டு நன்கு வெந்து வரட்டும்.

 அரைத்த முந்திரி, பாதாம்,பிஸ்தா விழுது சேர்க்கவும்.தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 நன்கு எல்லாம் சேர்ந்து ஒரு சேர சிறிது நேரம்  கொதிக்கட்டும்.
நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.

 சுவையான சிக்கன் பாங்கா தயார்.
பரோட்டா,சப்பாதி,இடியப்பம் நெய் சோற்றுடன் பரிமாறலாம்.
நான் இங்கு சாஃப்ரான் ரைஸ் உடன் பரிமாறி உள்ளேன்.

 இது அல் அய்ன் தோழி ஷபானா வலைப்பூ மூலம் கற்றுக் கொண்டேன்.Monday, March 14, 2016

ஏர் ஃப்ரைட் சிக்கன் / Air fried chicken

தேவையான பொருட்கள்;
சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2-3 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சில்லி பவுடர் -  1-2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - பாதி பழம்
உப்பு - தேவைக்கு.

மசாலா மைல்டாக இருந்தால் எனக்கு பிடிக்கும். நீங்க வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம்.
மசாலா நாம் தனியாகவும் வீட்டில் இருப்பதை சேர்க்கலாம்.
அல்லது  ரெடி மேட் சிக்கன்  டிக்கா, தந்தூரி,  65 மசாலா கூட உபயோகிக்கலாம்.

செய்முறை:
மேற்சொன்ன எல்லாப் பொருட்களும் சிக்கனுடன்  சேர்த்து விரவி குறைந்தது இரண்டு - நாலு மணி நேரம் ஊற வையுங்க.

ஏர் ஃப்ரையரை 10 நிமிடம் முற்சூடு செய்யுங்க.


அதில் இருக்கும் கூடையில் சிக்கனை அடுக்குங்க.
20 நிமிடம் செட் செய்து முதலில் வையுங்க.
திறந்து திருப்பி மீண்டும் 20 நிமிடம் வையுங்க.

கிரில் சிக்கன் போல் சூப்பராக இருக்கும்.

சுவையான ஹெல்தி ஏர் ஃப்ரைட் சிக்கன் தயார்.
ஏர் ஃப்ரையர் இருக்கிறவங்க செய்து பாருங்க.
இப்படி எங்க அண்ணன் வீட்டில் செய்து பரிமாறினாங்க.சூப்பராக இருந்தது.Friday, March 11, 2016

சிறப்பு விருந்தினர் பகிர்வு 32- திருமதி. சிராஜ் முனீரா / ஆட்டுக்கால் பாயா / Guest Post 32 / Mrs.Siraj Muneera / Aatukaal Paya

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.சிராஜ் முனீரா, இவர் எனக்கு அறுசுவை சமையல் தளத்தின் மூலம் அறிமுகமாகி பல வருடங்களாக மாறாத அன்போடு பழகி வருபவர். இந்தப் பகுதி ஆரம்பித்ததில் இருந்து குறிப்பு அனுப்புவதாக சொல்லி, இப்பொழுது தான் அனுப்பியிருக்கிறார்.
பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி மட்டும்.மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரே எழுதி அனுப்பிய சுய அறிமுகம் இதோ!

நான் சிராஜ் முனிரா. பிறந்து வளர்ந்தது மண் மனம் மாறாத எங்கள் நெல்லை". அம்மா வீடு கடலூர்.  படிப்பு வேலை எல்லாம் கடலூரில் தான்..திருமணம் முடிந்து கடந்த 9 ஆண்டுகளாக கணவருடன் அபுதாபியில்  வசித்து வருகிறேன். இரண்டு அருமையான பெண் குழந்தைகள். பெரியவள் 8 வயது அடுத்தவள் 3 வயது. அன்பான் குடும்ப வாழ்க்கை.

சமையல் பிடிக்கும். ரசித்து சமைப்பதுண்டு. ஆசியாக்கா அளவிற்கு ஆத்மார்த்தமாக கிடையாது. ஆசியாக்காவும் நானும் ஒரே ஊர். 7 வருட பழக்கம். நாங்க ஒன்னா பிறக்கல அதுதான் வித்யாசம். அத்தனை அன்பானவங்க. ஏதோ எழுத்துக்காக சொல்லல. சிரிச்ச முகம், குழந்தை மனசு. அது எப்பவும் அவங்க முகத்தில் தெரியும், சமையல் ராணி  நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.  இவங்க கிட்ட பிடிச்சது இவங்களோட தனித்துவம். உணவு வகைகளை தெளிவா படம் எடுத்து எல்லோருக்கும் புரியும் வகையில் வலைப்பூவில் ஒரு முழுநிறைவோடு போடுவது ஆசியாக்கா மட்டும் அறிந்த கலை. வாழ்த்துக்கள் ஆசியாக்கா. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.


(சுய அறிமுகத்தில் என்னைப் பற்றி பில்டப் கொஞ்சம் ஓவர் தான்.என்ன செய்ய ???? ஒரு வார்த்தை மாற்றக் கூடாதுன்னு ஆர்டர் போட்டு விட்டதால் அப்படியே பகிர்ந்து விட்டேன்.ஹி ஹி..)

இனி சிராஜ் முனீரா செய்த ஆட்டுக்கால் பாயாயாவை  படங்களுடன் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;-
ஆட்டுக்கால் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப. மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம் - தேவையானளவு
மல்லி கருவேப்பிலை -  தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


அரைக்க

தேங்காய் - 3 துண்டு
முந்திரி பருப்பு - 7 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் -  1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்


செய்முறை:-

முதலில் குக்கரில்  சுத்தம் செய்து நன்கு அலசிய ஆட்டுக்கால் துண்டுகளைச் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு 10 விசில் வரும் வரை வேக விடவும்.
ஒரு சின்ன சட்டியில் மிளகு சீரகம் சோம்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். அதில் கடைசியாக தனியா பொடி சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்


வறுத்ததை ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காயும், முந்திரியும்,1ஏலக்காவும் சேர்த்து மையாக அரைக்கவும். முந்திரிக்கு பதிலாக கசகசா சேர்க்கலாம். நான் முந்திரி போட்டேன்.

குக்கரை திறந்து கால் வெந்ததை உறுதி செய்து பின்பு அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.


மசாலா வாடை போனதும் மற்றோரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு, பச்சை மிளாய் சேர்த்து ,பின்பு வெங்காயம், மஞ்சப்பொடி, கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டு வாசனை போனதும், தக்காளி சேர்த்து மல்லி புதினா கொஞ்சம் சேர்க்கவும்.தக்காளி நல்ல வதங்கியதும் கால் ஆனம் சேர்த்து 5-  10 நிமிடம் சிம்மில் வைக்கவும் .


நல்ல மணம் வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்த மல்லி இலை போடவும். 1 மணி நேரம் கழித்து பரிமாறவும்

சுவையான பாயா ரெடி. 
இடியாப்பம், பரோட்டா, தோசை, ஆப்பம் உடன் பரிமாறலாம். 

க்ளீயர் சூப் வேண்டுமானால் தேங்காய், முந்திரி தவிர்க்கவும். மற்ற பொருட்களின் அளவையும் குறைத்துக் கொள்ளவும்

அருமையான பாயா..பிடித்திருந்தால் நீங்களும் செய்து அசத்துங்க!!!

சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு சிறப்பித்த திருமதி.சிராஜ் முனீராவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நீங்களும் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விரும்பினால்
விபரத்திற்கு இங்கு கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன், 
ஆசியா உமர்.

Wednesday, March 9, 2016

மீன் ரெண்டான் / Fish Rendaan (Cuddalore style)தேவையான பொருட்கள்;
மீன் கழுவி எடுக்க:
மீன் துண்டுகள் - அரைக்கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு .
மசாலா மீன் பொரிக்க விரவ:
மீன்
மிளகாய்த்தூள், உப்பு.(விருப்ப பட்டால் சீரகத்தூள், மிளகுத்தூள்  சிறிது சேர்த்து விரவலாம்)
ரெண்டான் செய்ய தே. பொ:
எண்ணெய் -  4  - 5 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 3
பொடியாக நறுக்கி கொள்ளவும்.( அளவு உங்க விருப்பம்)
பச்சை மிளகாய் - 2 - 3 கீறி போடவும்.
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
தேங்காய்ப்பால் - 1கப்
நறுக்கிய மல்லி இலை - கொஞ்சம்.
எலுமிச்சை ஜூஸ் - விருப்பப்பட்டால்.

செய்முறை:
மீனை சுத்தம் செய்து நன்கு அலசி மீண்டும் மஞ்சள் உப்பு போட்டு கழுவி தண்ணீர் வடித்து மேற் சொன்ன போட்டு ஊற வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மசாலா விரவிய மீனை பாதி வேக்காடாக பொரித்து எடுக்கவும்.
    
தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் போட்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி பின்பு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.

மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.

நன்கு கூட்டு போல ஆக வேண்டும்.

இப்படி கூட்டு போல் ஆனவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

பொரித்த மீனை சேர்க்கவும். பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் சிறிது நேரம் வைக்கவும்.
நறுக்கிய மல்லியிலை சேர்க்கவும்.
புளிப்பு தேவைப்பட்டால் லெமன் ஜூஸ் சிறிது சேர்க்கவும்.

சுவையான மீன் ரெண்டான் ரெடி.
இந்த குறிப்பு அலைன் தோழி ஷர்புன்னிஷா சொல்லக் கேட்டு செய்து பார்த்தேன் .செமை..எங்க வீட்டில் ரொம்ப பிடித்திருந்தது.மிக்க நன்றி தோழி.
விருப்பப்பட்டால் நீங்களும் செய்து பாருங்க.