Monday, June 27, 2016

ஹர்ரா பர்ரா கபாப் / Hara Bara Kabab


தேவையான பொருட்கள்;-
பாலக் - ஒரு கட்டு
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 4
மாங்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - தேவைக்கு.(கெட்டி படுவதற்கு)
உப்பு - சுவைக்கு.
எண்ணெய் பொரிக்க தேவைக்கு.
செய்முறை:
பாலக் கீரை முதலில் கொத்திகும் நீரில் போட்டு சிறிது நேரத்தில் வடித்து வைக்கவும்.பச்சை பட்டாணி ,உருளைக்கிழங்கு வேக வைத்து வைக்கவும்.





பாலக்,பச்சை பட்டாணி,இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து  மிக்சி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பவுலில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, மாங்காய்த்தூள், கடலைமாவு ,தேவைக்கு சிறிது உப்பு போட்டு கலந்து தேவையான சைசில் பிடித்து தாவாவில் எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்.
ஹர்ரா பர்ரா கபாப் ரெடி.
சுவை மிக அருமை.டொமட்டோ சாஸுடன் பரிமாறவும். செய்து பாருங்க.
திருமதி கசானா ரசூல் அவர்கள் குறிப்பை பார்த்து செய்து பார்த்தேன், நன்றாக வந்தது.
இவர் ஏற்கனவேசிறப்பு விருந்தினர் பகிர்வில்  நியுடெல்லா ஐஸ்கிரீம் குறிப்பையும் , மீன் பொளிச்சது குறிப்பும் பகிர்ந்திருக்கிறார்.மிக்க நன்றி.

Thursday, June 23, 2016

சின்ன வெங்காய் சாம்பார் / Onion Sambar


தேவையான பொருட்கள்;-
பருப்பு வேக வைக்க:-
துவரம் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது.
குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து பருப்பை 2-3 விசில்  வேக வைத்து வைக்கவும்.
சாம்பார் தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்  வற்றல் - 2
கருவேப்பிலை - 3 இணுக்கு
சின்ன வெங்காயம் - 25 எண்ணம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி - 1
சாம்பார் பொடி - 2-3 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி  இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

 செய்முறை:-
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்  சேர்த்து பொரிய விடவும், வற்றல் கருவேப்பிலை சேர்க்கவும்..
உரித்த சின்ன  வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு தேவைக்கு சேர்க்கவும்.


நன்கு வதங்க விடவும்.
 புளிக்கரைசலில் ஒரு தக்காளி பிணைந்து சேர்க்கவும்..
 நன்கு கொதித்து வரும் போது சாம்ப்பார் பொடி சேர்க்கவும்.
 ஒன்று சேர கொதிக்கட்டும்.
 வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.கொதி வரட்டும். உப்பு சரி பார்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 சூப்பர் சுவையுள்ள சின்ன வெங்காயம் சாம்பார் ரெடி.

Tuesday, June 21, 2016

முட்டை முக்குழியம் / Egg Mukkuzhyam

 தேவையான பொருட்கள்;-
முட்டை - 4
அரைக்க வேண்டிய பொருட்கள்;-
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பூண்டு பற்கள் - 2
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பெருஞ்சீரகம்,சீரகம், மிளகு - தலா அரைடீஸ்பூன்
முந்திரி பருப்பு அல்லது பாதாம் பருப்பு - 4
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிது
மஞ்சள் தூள் - பின்ச்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-
மேலே அரைக்கச் குறிப்பிட்டபடி அரைத்து எடுக்கவும்.


 அரைத்தவற்றை முட்டையுடன் கலந்து கொள்ளவும்.

 இட்லி மாவு பதம் கெட்டித்தன்மை இருக்க வேண்டும்.

குழிப்பணியாரச் சட்டியை சூடுபடுத்து எண்ணெய் தேவைக்கு விட்டு  முட்டைக் கலவையை ஒவ்வொரு சிறிய குழிக்கரண்டியளவு விடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்.

 
 மறுபுறமும் திருப்பி வெந்த பின்பு எடுக்கவும்.
 முட்டை முக்குழியம் ரெடி. சூப்பராக இருக்கும் .நீங்களும் செய்து பாருங்க.
தஞ்சை இஸ்லாமியர்கள் வீட்டில் செய்யக் கூடிய ஒரு அயிட்டம். இக்குறிப்பை Facebook , Share your recipes group - பில் திருமதி. நிஷா சலீம் பகிர்ந்திருந்தாங்க.நான் செய்து  பார்த்தேன். நன்றாக வந்தது .அருமை.
பகிர்வுக்கு மிக்க  நன்றி.
இக்குறிப்பைப் பகிர்ந்த திருமதி. நிஷா சலீம் ஏற்கனவே சிறப்பு விருந்தினர் பகிர்வில் தஞ்சாவூர் தம்ரூட் குறிப்பை பகிர்ந்து அசத்தியிருக்கிறார்.மிக்க நன்றி.

Monday, June 13, 2016

ப்ரெட் சட்டி பத்திரி / Chatti pathiri using bread

இக்குறிப்பையும் படங்களையும் அனுப்பி தந்த மருமகள் சுல்தானா மக்ஃபிராவிற்கு மனமார்ந்த நன்றி.நல்வாழ்த்துக்கள்.
தேவையான பொருட்கள்;
ஹோல் வீட் ப்ரெட் - 12 துண்டுகள்
முட்டை - 6
தேங்காய்ப்பால் - 1/4 கப்
வேகவைத்து உதிர்த்த சிக்கன் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4
நறுக்கிய தக்காளி  - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 +1  டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 +1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் -1/2 + 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா1/4 +1/4  டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய மல்லி  இலை
எண்ணெய் .நெய் - சிறிது தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.
(காரம் அவரவர் விருப்பம்)

செய்முறை:
சிக்கனை  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,, இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா ,உப்பு  சேர்த்து வேக வைக்கவும். ஆறிய பின்பு உதிர்த்துக் கொள்ளவும். சிக்கனில் எலும்பு இருந்தால் நீக்கி விடவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது,நறுக்கிய  மிளகாய், தக்காளி, மஞ்சள் ,மிளகாய்,கரம் மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும், உதிர்த்த சிக்கன் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அத்துடன், சிறிது உப்பு ,மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு  நான்ஸ்டிக் பேனில் நெய் தடவி, அதனில் முட்டையில் முக்கிய ப்ரெட் அடுக்கவும்.அதன் மேல் சிக்கன் கலவையை வைக்கவும் முட்டை கலவையை விடவும். மீண்டும் முட்டையில் டிப் செய்த ப்ரெட்டை வைக்கவும்.சிக்கன் கலவையை அதன் மேல் பரத்தி வைக்கவும்.கொஞ்சம் முட்டை கலவையை விடவும். மீண்டும் முட்டையில் டிப் செய்து ப்ரெட்டை வைக்கவும்.இறுதியாக  மீதி உள்ள முட்டை கலவையை மேலே விடவும்.

மூடி போட்டு சிம்மில் வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அப்படியே  ப்லேட் உதவியோடு திருப்பி மேல் பகுத்தியும் வேக வைக்கவும்.
வெந்த பின்பு திருப்பி எடுத்து கட் செய்து பரிமாறவும்.
இது ப்ரெட் உபயோகித்து செய்யக் கூடிய ஈசியான பத்திரி ரெசிப்பியாகும்.
சுவையான ப்ரெட் சட்டி பத்திரி  ரெடி.
டிப்ஸ் ; அடிகனமான நான்ஸ்டிக் தவாவை உபயோகித்து செய்யவும்.இல்லையெனில் அடி பிடித்து விடும்.
ரெசிப்பி பகிர்வு : மருமகள் சுல்தானா மக்ஃபிரா.
இன்று பிறந்தநாள் காணும் சுல்தானாவிற்கு மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள் மற்றும் ரெசிப்பி பகிர்வுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி.
சுல்தானா முன்பே சிறப்பு விருந்தினர் பகிர்வில் மலபார் மீன் பிரியாணி செய்து அசத்தியிருக்கிறார்.