Wednesday, July 27, 2016

சுரைக்காய் பொரியல் / Bottle gourd poriyal

பொதுவாக எனக்கு சுரைக்காய் என்றால் அவ்வளவு விருப்பம். அதுவும் அதீதமாய் சொம்பு சுரைக்காய் சேலத்திலிருந்து ஸ்பெஷலாய் வந்த வீட்டு தோட்டத்துக்காய், வெள்ளரியை விட சுவை.அப்படியே நறுக்கினால் சும்மாவே சாப்பிடலாம். கொஞ்சம் சாலட் செய்து சாப்பிட்டுவிட்டு மீதி பொரியல், கூட்டுன்னு வைத்து அசத்தியாச்சு..
தேவையான பொருட்கள்;-
நறுக்கிய  சுரைக்காய்  - கால் கிலோ
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கிள்ளிய வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-


சுரைக்காயை தோல் சீவிக் கொள்ளவும்.

பஞ்சு மாதிரி சுரைக்காய் விதையே இல்லை.
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன். கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பெருங்காயம், மஞ்ச,சீரகத்தூள் சேர்க்கவும்.
நறுக்கிய சுரைக்காய் தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி மூடி வேக விடவும்.
காய் வெந்து வரும்.
தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிரட்டவும்.
சுவையான சுரைக்காய் பொரியல் ரெடி.

மறுநாள் மீதி காயை சுரைக்காய் கூட்டு வைத்து அசத்தியாச்சு.
என்னுடைய சுரைக்காய் தோல் துவையல் , கூட்டு ரெசிப்பிக்கு  கிளிக்கவும்..
என்னுடைய சுரைக்காய்  மசாலா கூட்டும் செமையாய் இருக்கும்.

Monday, July 25, 2016

ஏர் ஃப்ரைட் பொட்டட்டோ வெட்ஜெஸ் / Air fried potato wedges


தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - கால் கிலோ ( நீள் வாக்கில் அரை பிறை வடிவத்தில் தோலோடு கட்  செய்து கொள்ளவும்)
விரும்பினால் கொதிக்கும் நீரில்( சிறிது நேரம் ) 3  நிமிடம்  வடிகட்டிக் கொள்ளவும்.
மிளகுத்தூள் ,பப்ரிக்கா பவுடர் - தலா அரை டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2 டீஸ்பூன்( விரும்பினால்)
உப்பு - தேவைக்கு.


செய்முறை:
மேற் சொன்ன அனைத்து பொருட்களும் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஏர் ஃப்ரையரை முற்சூடு செய்யவும்.
200 டிகிரி வெப்பத்தில் , தட்டு அல்லது  கூடையில் 10-15 நிமிடம் வைத்து ஏர் ஃப்ரை செய்து எடுக்கவும்.
சுவையான ஏர் ஃப்ரைட் பொடட்டோ வெட்ஜெஸ் ரெடி.
பிடித்தமான டிப்பிங் சாஸுடன் பரிமாறவும்.
 என்னுடைய ஈஸி பொட்டட்டோ வெட்ஜெஸ் குறிப்பைக்காண இங்கே கிளிக்கவும்..

Saturday, July 23, 2016

தூதுவளை ரசம் / Thoothuvalai rasam

 தேவையான பொருட்கள்:-
ரசத்திற்கு தட்டிக் கொள்ள:-
தூதுவளை ஒரு கைபிடி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - விரும்பினால்(நான் சேர்க்கவில்லை)

தாளிக்க:
எண்ணெய் - 1  -2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பருப்பு வேக வைத்த தண்ணீர் (சிறிது பருப்புடன்)(விரும்பினால்)
உப்பு தேவைக்கு.

செய்முறை:-
தூதுவளை ஃப்ரெஷாக ஆய்ந்து  கொள்ளவும்.

 ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரசத்திற்கு தட்டிக் கொள்ள வேண்டிய பொருட்களை வதக்கிக் கொள்ளவும்.


 மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு சுற்றி எடுக்கவும்.

 தாளிக்க அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
 மிக்ஸியில் சுற்றி எடுத்ததை சேர்க்கவும்.மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
 புளித்தண்ணீர் சேர்க்கவும்.தண்ணீருடன் பருப்பும் விரும்பினால்  சேர்க்கவும். ரசப்பொடி சேர்க்கவும்.

 தேவைக்கு உப்பு சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி.
அப்படியே சூப் போல் குடிக்கலாம். அல்லது சுடு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். செமையாக இருக்கும். சளித்தொந்திரவுக்கு நல்லதாம்.

Friday, July 22, 2016

கத்திரிக்காய் கட்டா / Brinjal Katta

இது கிட்டதட்ட எண்ணெய் கத்திரிக்காய் மாதிரி தான். ஒவ்வொரு முறையும் சிறிய மாறுதலுடன் சமைப்பதுண்டு. இந்த முறை முறை கத்திரிக்காய் கட்டா என்ற பெயருடன் பரிமாறல்.பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.
 தேவையான பொருட்கள்;-
பிஞ்சு வயலட் கத்திரிக்காய் - அரைக்கிலோ
எண்ணெய் - 75-100 மில்லி
புளி ஊற வைக்க எலுமிச்சை  அளவு
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு தேவைக்கு.
வறுத்து அரைக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள்ளு - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்.
(முழு மல்லி, மிள்காய்வற்றல் கூட உபயோகிக்கலாம்.)
செய்முறை:

முதலில்  எண்ணெய் சூடானவுடன் வறுக்கச் சொன்ன பொருட்கள் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து கருகாமல் ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
 ஒரு ப்ரெஸ்ஸர் பானில் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கத்திரிக்காய் சேர்க்கவும்.
 மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.
 அரைத்த விழுது சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.
 புளித்தண்ணீர் சேர்க்கவும்.
 கலந்து மூடி மீடியம் ப்லேமில்  2 விசில் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் பிரட்டி எடுத்து கத்திரிக்காய் உடையாமல் எடுத்து வைத்து பரிமாறவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும்,பிரியாணி,புலாவ், வெறும் சோறு,இட்லி,தோசைக்கு கூட பொருத்தமாக இருக்கும்.
 சுவையான கத்திரிக்காய் கட்டா ரெடி.

Wednesday, July 13, 2016

லெமன் பெப்பர் கார்லிக் சிக்கன் (ஏர் ஃப்ரைட்) / Lemon pepper garlic chicken (Air fried)

பாத்திரங்கள் உபகரணங்கள் பகுதிக்கு ஏர்ஃப்ரையர் பற்றிய பகிர்வு இன்று. என் நட்பு வட்டத்தில் என்ன ஏர்  ஃப்ரையர் வாங்கலாம் நீங்க என்ன வாங்கி இருக்கீங்கன்னு கேட்டவங்களுக்காக இந்த பகிர்வு.

ரொம்ப உபயோகமான உபகரணம். எங்களைப் பொறுத்தவரை எப்படியும் தினமும் உபயோகப் படுத்துகிறேன்.ஃப்ரை,கிரில், கபாப், பேக்கிங்னு நல்ல உபயோகம்.
 தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் - அரைக்கிலோ
லெமன்  ஜூஸ் -1 பழம்
மிளகுத்தூள் - 1 -2 டேபிள்ஸ்பூன்
பூண்டு  - 4 - 6 பற்கள் அத்துடன் சிறிது பார்ஸ்லி  இலைகள் அல்லது கொத்தமல்லி  சேர்த்து  நன்கு தட்டிக் கொள்ளவும். (நான் பார்ஸ்லி இலை தான் சேர்த்தேன்.கொத்தமல்லி இலை  போலவே இருக்கும் மணம் வித்தியாசப்படும்)
ஆனியன் பவுடர் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


செய்முறை:
சிக்கன் துண்டுகள்    சுத்தம் செய்து நன்கு  அலசி இறுதியாக  அரை டீஸ்பூன்  மஞ்சள்  தூள் போட்ட தண்ணீரில் அலசி   சிக்கன்  வடிகட்டி  வைக்கவும்.
சிக்கன் தவிர மேற்சொன்ன  அனைத்து பொருட்களையும்  சேர்த்து ஒரு பவுலில்  கலந்து கொள்ளவும்.பின்பு சிக்கனையும் சேர்த்து நன்கு பிரட்டவும்.

குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். அல்லது முதல் நாளே ஊற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

 பின்பு ஊறிய சிக்கனை  ஃப்ரிட்ஜில் இருந்தால் அரைமணி  நேரம் முன்பு வெளியே எடுத்து வைக்கவும்.
ஏர் ஃப்ரையரை முதலில் 3 நிமிடம் முற்சூடு செய்யவும்.
பின்பு ஏர் ஃப்ரையரில் இப்படி ஒரு ஸ்டாண்டு இருந்தால் மேலே சிக்கன் துண்டுகளை வைக்கவும்.கொஞ்சமாக ஃப்ரை செய்வதாக இருந்தால் இப்படி செய்யலாம்.180 டிகிரி செட் செய்து ஏழு நிமிடம் வைத்து ஃப்ரை யரை  ஓட விடவும்.
 ஏழு நிமிடம் கழித்து சிக்கன் துண்டுகள் ஓரளவு வெந்து காணப்படும்.
 திருப்பி வைத்து மீண்டும் ஏழு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான ஏர் ஃப்ரைட் லெமன் பெப்பர் கார்லிக் சிக்கன் ரெடி.

மொத்தமாக ஆறேழு துண்டுகள் வைக்க வேண்டுமானால் இப்படி கூடை யில் வைத்து ஃப்ரை செய்து எடுக்கலாம்.

 அப்படியே சும்மா ஸ்டார்டர் மாதிரி ஸ்பைஸி டிப்பிங் சாஸில் டிப் செய்து சாப்பிடலாம்.
உங்கள் விருப்பம் போல் பரிமாறவும்.மேலே கிரிஸ்பாகவும் உட்புறம் சாஃப்டாக  இருக்கும். எஞ்சாய் !

பேலியோ டயட் இருப்பவங்க இந்த முறையில் செய்து சாப்பிடலாம்.


Sunday, July 10, 2016

வெஜிடபிள் பகோடா / Vegetable Pakoda

பக்கோடா மிக்ஸ் ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு மாதிரி செய்வேன். வீட்டில் இருக்கும் பொருட்களைப் பொருத்து.
தேவையான பொருட்கள்;-
சிறிதாக  நறுக்கிய  காய்கள் - ஒரு கப் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,உதிர்த்த பச்சை பட்டாணி - கால் கப்,),நறுக்கிய வெங்காயம் -கால் கப்
நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய்- சிறிது
அரை கப் -கடலை மாவு
கால் கப் - அரிசி மாவு ( அல்லது அரை கப் கூட போடலாம் அல்லது ஒரு கப் கடலை மாவு மட்டும் கூட போடலாம்.)
எண்ணெய் பொரிக்க தேவைக்கு.

மாவுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு,கால் டீஸ்பூன் கரம் மசாலா, சோம்பு, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி,உப்பு  சுவைக்கேற்ப சேர்க்கவும்., சோடா உப்பு பிஞ்ச் சேர்க்கவும்.
காய்கறிகளோடு கலந்து கொள்ளவும்.எண்ணெய் காய வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மாவில் விட்டு பிசறவும்.

 காய்ந்த எண்ணெயில் சிறிதாக எடுத்து போடவும்.பொன்னிறமாக பொரிந்தவுடன் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.

இதனைப் போண்டா மாதிரியும் போடலாம்.
நோன்பு நேரம் ஆனியன் பக்கோடா போடுவதுண்டு ,ஒரு மாற்றத்திற்கு கஞ்சிக்கு பக்க துணையாக இந்த பக்கோடாவும் போடலாம்.
இது ஒரு முறை மிக்ஸ் வெஜ் பக்கோடா பார்க்க கிளிக்கவும்.