Thursday, January 5, 2017

வாழைப்பழம் தேங்காய்ப்பூ கேக் /பனானா கோகனட் கேக் / Banana Coconut Cake



தேவையான பொருட்கள்;-
வாழைப்பழம் - 2
தேங்காய் பவுடர் - 1 கப்
மைதா - ஒன்னரை கப்
பொடித்த  சர்க்கரை - 1/2 கப் (கேஸ்டர் சுகர்)
பட்டர் - 150 கிராம்
முட்டை - 2
பால் - 120  மில்லி
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
பட்டைத்தூள் - 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை:-

எல்லாப் பொரூட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டால் பேக்கிங் என்பது ரொம்ப ஈசி தான்.



முதலில் பட்டர் சீனி சேர்த்து நுரைக்க சீனி கரையும் வரை அடிக்கவும்.
தேங்காய்ப்பவுடரை லேசாக வறுத்து வைக்கவும்.


பட்டர் சீனி சேர்த்து அடித்தவுடன் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.

.


அத்துடன் பேக்கிங் சோடா சேர்த்து திரித்த மைதா மாவு,தேங்காய்ப்பவுடர் பட்டைத்தூள் சேர்க்கவும். மெதுவாக கலந்து வைக்கவும்.
அடுத்து  பால் பழம் கலந்து மசித்து வைக்கவும்.
கூழ் போல் அடித்துக் கொள்ளவும்.
பால் பழத்துடன். தயாராக உள்ள  கலந்து வைத்த மாவு மிக்ஸ் சேர்க்கவும். பக்குவமாக சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

பேக்கிங் பேனில்  பட்டர் தடவிய பேப்பர் வைக்கவும். அதனில் மாவுக் கலவை எடுத்து வைக்கவும்.ஒரு போல் சமமாக வைக்கவும்.
ஓவனை முற்சூடு செய்யவும்.

180 டிகிரி வெப்பநிலையில் ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.
ஆறியவுடன் கேக்கை பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்றி பட்டர் பேப்பரை எடுக்கவும்.
விரும்பினால் பட்டர்,தேன், தேங்காய்ப்பவுடர் சேர்த்து டாப்பிங் செய்தும் பரிமாறலாம்.
இல்லையெனில் அப்படியே   துண்டு போட்டு பரிமாறலாம்.


சுவையான பனானா கோகனட் கேக் தயார். 
டீ,காஃபியுடன் பரிமாற ஏற்றதாய் இருக்கும்.

6 comments:

மனோ சாமிநாதன் said...

கேக் குறிப்பு அருமை ஆசியா! இது பொதுவாய் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். காஸ் அல்லது மைக்ரோவேவ் குக்கரில் பேக் செய்ய குறைந்த நேரமே பிடிக்குமென்று நினைக்கிறேன்.

athira said...

ஆசியா நலமாக இருக்கிறீங்களோ? எப்படி இருந்த புளொக்குகளும் கொமெண்ட்ஸ்களும் இப்போ இப்படி ஆச்சே என நினைக்க மிகவும் கவலையாக இருக்கு. இனி நானும் களமிறங்கி பழையபடி கொஞ்சம் புளொக்கை தூசு தட்டலாம் என நினைக்கிறேன்.

மிக அருமையா வந்திருக்கு கேக், செய்து பார்க்க மனம் தூண்டுது, பார்ப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான ஒரு கேக்....

குறிப்புப் பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

மனோ அக்கா கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றிகா.

அதிரா வாங்கோ, வாங்கோ எத்தனை மகிழ்ச்சி தெரியுமா? நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்..நேற்று தான் நினைத்தேன்..இந்த அதிரா இனி வருவாங்களா? பார்க்க ,பேச முடியுமா? ஒரேடியாக ஆள் அட்ரஸ் இல்லையேன்னு.உங்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய ஆயில் நூறு.

வெங்கட் சகோ, கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

பரிவை சே.குமார் said...

ஆஹா... புதுசா இருக்கே...
படங்களைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோணுதே...

Asiya Omar said...

சகோ.குமார் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.