Tuesday, January 3, 2017

ஈசி லைட் ஃப்ரூட் கேக் / Easy light fruit cake



 தேவையான பொருட்கள்;-
மைதா - 200 கிராம்
பட்டர் - 200 கிராம்
முட்டை - 3 (200 கிராம்)
சர்க்கரை - 150 அல்லது  200 கிராம் (கேஸ்டர் சுகர்) (பேரீச்சை சேர்ப்பதால் இனிப்பாக இருக்கும்,இனிப்பு அளவு உங்கள் விருப்பம்)
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
உலர் பழங்கள் & நட்ஸ் - 300 கிராம்  ( கொட்டை நீக்கிய பேரீச்சை, உலர் திராட்சை,டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய,முந்திரி, பாதாம்)
பழத்தோல் துருவியது ( எலுமிச்சை,ஆரஞ்சு பழத்தோல் துருவியது) மணத்திற்கு - கால் கப் (மேல் பகுதி மட்டும்)(விரும்பினால்)
ஸ்பைஸ்  சேர்க்க வேண்டியது -( ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன், பட்டைத்தூள் - அரைடீஸ்பூன்)
ஆரஞ்சு ஜூஸ் அல்லது கிரேப் ஜூஸ் - 100 மில்லி.
( வீட்டில் இருப்பதை வைத்து தயாரித்த கேக் இது)
அலங்கரிக்க முழு முந்திரி அல்லது பாதாம் -சிறிது
செய்முறை:
உலர் பழங்கள் ,நட்ஸ் பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும். 
 மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்து வைக்கவும்.
 மாவுடன் ஃப்ரூட்ஸ் நட்ஸ் கலந்து வைக்கவும். .

இப்படி கலந்து வைப்பதால் நட்ஸ்& ஃப்ரூட்ஸ் கேக்கின் எல்லா இடமும் பரந்து காணப்படும்,இல்லையெனில் அடியில் தங்கி விடும்
பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, பட்டர் தடவி வைக்கவும்.


 சீனி ,பட்டர் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடித்துக் கொள்ளவும்.

அத்துடன் வெனிலா எசன்ஸ் ,முட்டை சேர்த்து அடிக்கவும்.
 கிரேப் ஜுஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் , ஸ்பைஸ் பவுடர் சேர்க்கவும்..
 நன்கு அடிக்கவும்.
 அத்துடன் ஃப்ரூட்ஸ் நட்ஸ் கலந்து வைத்த மாவை மெதுவாக சேர்க்கவும்.
 ஒரு போல் கலந்து வைக்கவும்.
 தயார் நிலையில் உள்ள பேக்கிங் ட்ரேயில் மாவுக் கலவையை விடவும்.முந்திரி பருப்பை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கவும்.
ஓவனை முற்சூடு செய்யவும்.
 180 அல்லது 200 டிகிரியில் ஒரு மணி நேரம் பக்குவமாக எலக்ட்ரிக் ஓவனில் பேக் செய்து எடுக்கவும்.

கேக் தயாரானவுடன் கவனமாக வேளியே எடுத்து நன்கு ஆற வைக்கவும்.



 ஆறிய கேக்கை ஒரு தட்டில் தலை கீழாக திருப்பவும், பட்டர் பேப்பரை எடுக்கவும்.
 விரும்பினால் ஓரத்தை ட்ரிம் செய்யலாம்.

பின்பு துண்டு போட்டு பரிமாறவும்.
யம்மி லைட் ஃப்ரூட் கேக் தயார். செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.
 2017 புது வருடத்திற்காக செய்து அசத்திய கேக் இது.
அன்பான நட்புகள் அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

1 comment:

sangeethas creations said...

அருமை அக்கா
நிச்சயம் முயற்சிக்கிறேன் ..சேமித்துக்கொண்டேன்