Thursday, January 12, 2017

ஈசி ரஸ்மலாய் / Easy Rasmalai

 உங்களுக்கு கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கும்படி இந்த குறிப்பைக் கொடுக்கிறேன். டேஸ்ட் சூப்பராக இருக்கு. ஆனால் இது முட்டை சேர்த்து செய்வது.முட்டை சேர்த்தேன்னு நீங்க சொன்னால் கூட நம்ப மாட்டாங்க. பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் & செய்முறை:-
முதலில் செய்ய வேண்டியது.
பால் - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் - ஒரு கப்
சாஃப்ரான் - பெரிய பின்ச்

 மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். விரும்பினால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
 ஒரு கப் பால் மாவிற்கு  மாவிற்கு கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு  சிறிய அளவிலான முட்டை  சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து கொள்ளவும்.
 நான் கொஞ்சம் அதிகமாக செய்ததால் இரண்டு முட்டை சேர்த்தேன்.
 மாவு பிசைந்து ரெடி செய்து சிறிய உருண்டையாகவோ அல்லது சிறிய வடை மாதிரியோ தட்டிக் கொள்ளவும்.
பிசு பிசுன்னு இருந்தால் சிறிது நெய் தொட்டு மாவை எடுத்து தட்டவும்.
 கொதிக்கும் பாலில் ஒவ்வொன்றாக போடவும்.
 அடுப்பில் சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.அகலமான பாத்திரத்தில் போடவும். இல்லையெனில் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நடுவில் வேகாமல் இருந்து விடும்.
வெந்த பின்பு இப்படி அழகான எலுமிச்சை நிறத்தில் வந்து விடும்.
சுவையான ரஸ்மலாய் தயார்.
பிஸ்தா பருப்பை ஊறவிட்டு தோல் எடுத்து பொடியாக நறுக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.
பிடித்திருந்தால் செய்து பாருங்க.பிள்ளைங்களுக்கு செய்து கொடுங்க.

4 comments:

athira said...

ஆவ்வ்வ் ஆசியா பார்க்கவே ஆசையா இருக்கு ஆனா புரியவில்லை, உருண்டைகள் செய்வது மில்க் பவுடரிலா? பால் எனச் சொல்வது பசு மில்க் தானே? இல்ல தேங்காய்ப்பாலோ?

Asiya Omar said...

பால் பவுடர், ஃப்ரெஷ் மில்க் தான் அதிரா. செய்து பாருங்க. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நன்றாக இருக்கிறது. ரஸ்மலாய் இங்கே அவ்வப்போது சாப்பிடுவதுண்டு....

பரிவை சே.குமார் said...

வாவ்... சூப்பர்....


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.