Monday, January 16, 2017

மிக்ஸ்ட் பார்பிகியூ சிக்கன் / Mixed Chicken Barbecue


அமீரகத்தில் பொதுவாக  பார்க், பீச்சில் குளிர் காலத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்து  பார்பிகியூ செய்து சாப்பிடுவது சாதாரணமாக காணப்படும் ஒரு நிகழ்வு.
இங்கு வீட்டில் முன்னாடி,பின்னாடி, சைடில் திறந்த வெளி  இடம் இருப்பதால் செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தது தான் இது.

தந்தூரி சிக்கன் பார்பிகியூ:
தேவையான பொருட்கள்;-
சிக்கன் - 1 கிலோ
சிக்கனில் ஊற வைக்க மசாலா தயார் செய்ய வேண்டும்.
தந்தூரி மசாலா பேஸ்ட்  தயாரிக்க:-
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - 1
காஷ்மீரி மிள்காய்த்தூள் - 1  அல்லது 2 டீஸ்பூன்(காரம் அவரவர் விருப்பம்)
கரம் மசாலா -கால் -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.
இறுதியாக மேலே தடவ:-
பட்டர் - சிறிய துண்டு.
செய்முறை:- 
முதலில் மேற்சொன்னபடி பேஸ்ட் தயார் செய்து  கொள்ளவும்.
 கழுவி, வடிகட்டிய சிக்கனை பேஸ்டில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்தது 3-4 மணி நேரம் இருக்கட்டும்.
பின்பு பார்பிகியூ செய்ய அடுப்பை தயார் செய்து கொண்டு சிக்கனை கம்பி தட்டில் அடுக்கி கனலில் இரு புறமும் வேகுமாறு சுட்டு எடுக்க வேண்டும்.சுவையான பார்பிகியூ சிக்கன் தயார். சிக்கனை எடுத்து பட்டர் தடவி அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைக்கவும். பரிமாறும் வரை வெது வெதுப்பாக இருக்கும்.
மசாலா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி போடுவதுண்டு. ரெடி மேட் டிக்கா அல்லது பார்பிகியூ  மசாலா கூட உபயோகிக்கலாம்.

பார்பிகியூ ஹரியாலி சிக்கன் டிக்கா
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாய் – 1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
கசூரி மேத்தி – 1-2 டீஸ்பூன் (விரும்பினால் – நல்ல மணமாக இருக்கும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க:-
மல்லி, புதினா, கருவேப்பிலை – தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 3 (காரம் அவரவர் விருப்பம்)
எலுமிச்சை பழம் ஜூஸ் (சிறியது )– 1
உப்பு – தேவைக்கு.
செய்முறை:-
போன்லெஸ் சிக்கன் துண்டுகளை ஒரே போல் கட் செய்து அலசி தண்ணீர் சுத்தமாக வடிய வைக்கவும்.
மரக்குச்சியை தண்ணீரில் ஊற விடவும்.
மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாயை லெமன் ஜூஸ், சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்தால் பச்சையாகவே இருக்கும்,நிறம் மாறாது.
சிக்கனுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர்,கரம் மசாலா,அரைத்த விழுது,கசூரி மேத்தி,எண்ணெய், உப்பு சிறிது தேவைக்கு சேர்த்து குறைந்தது 1-2 மணி நேரமாவது ஊற வைக்கவும். முதல் நாளே செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
பின்பு பார்பிகியூ அடுப்பில் நெருப்பு கணல் வந்தவுடன் மரக்குச்சியில் சிக்கனை கோர்த்து கம்பி தட்டில் வைத்து இரு புறமும் நன்கு வேகுமாறு சுட்டு எடுக்கவும்.
சுவையான ஹரியாலி சிக்கன் டிக்கா தயார்.
 சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் /BBQ chicken kofta kebab
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – கால் கிலோ
பொடியாக சாப் செய்த வெங்காயம் – 1 ( தண்ணீரை பிழிந்து கொள்ளவும்)
நறுக்கிய மல்லி புதினா – சிறிது
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
முட்டை வெள்ளைக்கரு – 1
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது –தலா 1 டீஸ்பூன்
மிளகு,சோம்பு, சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு.
செய்முறை:
எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கலந்து அரைத்து எடுக்கவும்.மிக்ஸ் சிக்கென்று இருக்க வேண்டும்.
தளர்வாக இருந்தால் ப்ரெட் துண்டு ஒன்றை பொடித்து சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மரக்குச்சியை அரைமணி தண்ணீரில் ஊற வைக்கவும்.
அனைத்தையும் கலந்து கபாப் போல் உருட்டி மரக்குச்சியில் வைத்து பார்பிகியூ அடுப்பில் கிரில் செய்து எடுக்கவும்.
சுவையான ஹெல்தி சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் ரெடி.
வெஜ் சாலட்டுடன் பரிமாறவும்.

அடுப்பு கனலில் வெங்காயம் வைத்து சுட்டும் பரிமாறினால் சூப்பர்.இதே அடுப்பில் மக்காச்சோளம் சுடலாம். கெட்டில் வைத்து ப்ளாக் டீ  கூட போடலாம்..


1 comment:

athira said...

ஆவ்வ்வ் ஒரே கல்லில் பல மாங்காய்கள் செய்து காட்டிட்டீங்க... அத்தனையும் அருமை, எனக்கு ரொம்ப பிடிச்ச ரெசிப்பி, நாங்களும் அடிக்கடி செய்வோம்.

///அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைக்கவும். பரிமாறும் வரை வெது வெதுப்பாக இருக்கும்./// யேஸ் இது மிக மிக உண்மையான தகவல், நானும் இப்படித்தான் சுற்றி வைப்பேன், கேக் கூட இந்த ஃபொயிலிங் பேப்பரால் சுத்தி வைத்தால் காயாமல் இருக்கும்.