Wednesday, January 4, 2017

புளி மீன் / Puli Meen / Tamarind Fish


தேவையான பொருட்கள்;-
மீன் - 300 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 
பூண்டு - 5 பற்கள்
கிரீய பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2இணுக்கு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் அரைத்தது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
மீனைச் சுத்தம் செய்து நன்கு அலசி துண்டு போட்டு மீண்டும் தண்ணீர் தெளிவாக இருக்கும் வரை அலசி வடிய வைக்கவும்.
 பூண்டு வெங்காயம் மிளகாய் நறுக்கி வைக்கவும். தேங்காய் அரைத்து வைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
 மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 புளித்தண்ணீர் விடவும்.
 நன்கு கொதிக்க விடவும்.
 புளி ,மசாலா வாடை  மடங்கி வரும், அரைத்த தேங்காய்ச் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 கொதித்து வரும் பொழுது மீனைச் சேர்க்கவும்.

 அடுப்பை மீடியமாக வைத்து மீனை வேக விடவும்.
 மீன் வெந்து குழம்பு கெட்டியாகி  வரும் பொழுது  நெருப்பைக் குறைக்கவும்.
 குழம்பில்   எண்ணெய் மேலெழும்பி வரும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான புளி மீன் தயார்.
இது கெட்டியாக பிரட்டியது போல் இருக்கும்.
 இப்படி சிம்பிளாக செய்து பாருங்க சுவை அபாரமாக இருக்கும். குழம்பு பட்டு போல் இருக்கும்.
இந்த புளி மீனிற்கு.சாதாரணமாக மீன் குழம்பு செய்வது போல் தக்காளி, மல்லிப் பொடி, தாளிக்க கடுகு, வெந்தயம் எல்லாம் தேவையில்லை.
பிடித்திருந்தால் செய்து பாருங்க.
நான் மீன் குழம்பை பல விதமாக சமைப்பதுண்டு. அதில் இது ஒரு வகை.
இரண்டு பேருக்கு சமைப்பதாய் இருந்தால் இப்படி நாலு துண்டு போட்டு ஈசியாக செய்து விடலாம்.



2 comments:

Nisha Radhakrishnan said...

அருமை. எல்லா வகையான மீன்களையும் உபயோகப்படுத்தலாமா?

Asiya Omar said...

உங்கள் விருப்பம் தான் நிஷா.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.