Monday, January 23, 2017

சிவப்பு டர்னிப் கூட்டு /நூல் கோல் / Red turnip kootu

 தேவையான பொருட்கள்:-
சிவப்பு டர்னிப் - கால் கிலோ
சிறுபருப்பு - 50 கிராம்
மஞ்சள் , சீரகம், பெருஞ்சீரகம் தூள் - தலா கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைத்துச் சேர்க்க:-
தேங்காய்த்துருவல் - நான்கு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - விரும்பினால் - 1
சீரகம் தாளிக்க சேர்க்காமல் இங்கு விரும்பினால் சேர்த்தும் அரைக்கலாம்.
தாளிக்க:- 
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய  வெங்காயம் - சிறிது
நறுக்கிய மல்லி இலை - சிறிது.

செய்முறை:-
 சிவப்பு டர்னிப்பை நன்கு அலசி தோல் நீக்கி கொள்ளவும். உருண்டையாக இருந்தால் டர்னிப் என்றும், நீள் வாக்கில் இருந்தால் சிவப்பு முள்ளங்கி என்றும் சொல்வதுண்டு.

 சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
 ஊற வைத்த சிறுபருப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் நறுக்கிய ட்ரனிப்பை சேர்க்கவும்.
 மசாலா  தூள் வகைகள் சேர்த்து வேக விடவும்.
 தேங்காய், மிளகாய் பூண்டு(விரும்பினால்) சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 பருப்பும் டர்னிப்பும் வெந்து வரும் பொழுது  தேங்காய் மிளகாய் அரவை சேர்க்கவும்..
 ஒன்று சேர்ந்து கொதித்து வரட்டும்.
 மேலே தாளிக்க சொன்னவற்றை தாளித்து கொட்டவும்.
 வெந்த டர்னிப்  பருப்பை சேர்த்து தேவைப் பட்டால் சிறிது வெந்நீர் சேர்த்து உப்பு சரிபார்த்து நறுக்கிய மல்லி இலை தூவவும்.

 மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான சிவப்பு டர்னிப் கூட்டு தயார்.
சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
கூட்டு செய்வது உங்கள் விருப்பம் தான். நான் முறையை சிறிது மாற்றி மாற்றி முயற்சி செய்வதுண்டு.
நீங்களும் சிவப்பு டர்னிப் கூட்டு செய்து பாருங்க.
இல்லாட்டி அப்படியே சாலட் மாதிரியும் சாப்பிடலாம்.

2 comments:

athira said...

நல்லதொரு குறிப்பு.. இதை இங்கு ரெட்டீஸ் எனச் சொல்வோம், இன்றுகூட வாங்கினேன், இதை நாம் பச்சையாக சலாட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவோம்..

அடுத்து உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான முயற்சி! நன்றாக இருக்கிறது ஆசியா!