Friday, February 24, 2017

ஆட்டுக்கால் பாயா / Aatukaal Paya

தேவையான பொருட்கள்:-
ஆட்டுக்கால் - 2 செட் ( 8 எண்ணம்)
பெரிய வெங்காயம்  -2
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - ஏலம் பட்டை கிராம்புத்தூள் -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் ( விரும்பினால்)
நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:-
மிளகு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 டீஸ்பூன்,மல்லித்தூள் - 1  டேபிள்ஸ்பூன்,  தேங்காய் 4 டேபிள்ஸ்பூன், முந்திரி -6 - 8. காரம் வேண்டுமானால் மிளகை கூட்டிக் கொள்ளலாம். இதுவே சரியாக இருக்கும், (விரும்பினால் லேசாக வெதுப்பி எடுத்து அரைத்துக் கொள்ளலாம்)

செய்முறை:-
ஆட்டுக்காலை முதலில் வேக வைக்க வேண்டும். நீங்க தேவைக்கு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரிலோ அல்லது ஸ்லோ குக்கரிலோ வேக வைத்துக் கொள்ளலாம். ப்ரஸர் குக்கரில் என்றால் ஒரு முக்கால் மணி நேரம் அடுப்பைக் குறைத்து வேக வைத்து எடுக்கவும்.
நான் ஸ்லோ குக்கரில் வெந்து எடுத்தேன். இந்த ஸ்லோ குக்கரில் வைத்து வேகும் பொழுது தண்ணீர் பொங்கி வடிவதோ, குறையவோ செய்யாது . நாம் வைத்த அந்த தன்ணீரும் அப்படியே இருக்கும். நல்ல சாஃப்டாக வெந்து அதன் உருவும் மாறாமல் அப்படியே இருக்கும். மணமும் சுவையும் செமையாக இருக்கும்.
நீங்க முழுவதும் கூட இதிலே செய்யலாம். மேலே தாளித்து மட்டும் கொட்டினால் கூட போதும். என்னோட குக்கர் அளவு 3 லிட்டர் தான்.
சூப் எனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்பதால் நான் வேக வைத்து  எடுத்து  பாத்திரத்தில் தனியாக பாயாவை செய்து கொண்டேன்.
முதலில் ஸ்லோகுக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு சுத்தம் செய்து துண்டாக்கிய ஆட்டுக்காலைப் போடவும்.
தேவைக்கு ஆட்டுக்கால் மூழ்கும் அளவு தண்ணீர் வைக்கவும். மூடி வேக விடவும். ஹையில் வைக்கலாம். இளம் கால் என்பதால் இரண்டு மணி நேரத்தில் பஞ்சாக வெந்து விட்டது.
அரைக்க சொன்னவற்றைச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஆட்டுக்கால வேகட்டும்.விரும்பினால் வெந்த பின்பு இதில் கூட அரைவையைச் சேர்க்கலாம்.
2-3 மணி நேரத்தில் கால் வெந்து விடும். நாம் முன்பே நேரம் கிடைக்கும் பொழுது வெந்து வைத்துக் கொள்ளலாம்.
video

வெந்து விட்டதை உறுதி செய்த பின்பு ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு  வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது சிம்மில் வைத்து மூடி திறக்கவும். சிறிது நறுக்கிய மல்லி,கருவேப்பிலை, புதினா சேர்க்கவும்.( சும்மா கொஞ்சம் தான் சேர்க்க வேண்டும். ஒரு பெரிய தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து விடவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். விரும்பினால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம். நன்கு தக்காளி வதங்கி கூட்டு போல் ஆக வேண்டும்.

பின்பு குக்கரில் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்க்கவும். உப்பு தேவைக்கு போடவும். அரைத்த தேங்காய் மிளகு மசாலாவைச் சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து தேங்காய் வாடை மடங்க வேண்டும்.

video
கொதித்து பாயா தயார் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.
மேலே சிறிது நறுக்கிய மல்லி இலை தூவலாம். மூடி வைக்கவும்.
ஆட்டுக்கால் பாயாவை, பரோட்டா, மெத்து தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் பரிமாறலாம்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மசாலா, இது ஒரு முறை.உங்கள் விருப்பம் தான் வீட்டு மசாலா, ஊர் மசாலா போட்டும் செய்யலாம்.
செமையாக இருக்கும் .

1 comment:

பரிவை சே.குமார் said...

ஆட்டுக்கால் பாயா செய்து பார்க்கணும்...
அருமை அக்கா...