Monday, February 20, 2017

பார்லி மட்டன்/ பீஃப் வெஜ் சூப் / Barley /Mutton / Beef vegetable soup

 பாத்திரங்கள் உபகரணங்கள் பகுதிக்கு பதிவு போட்டு நாளாகுது. இந்த வருடம் புத்தாண்டுக்கு கிடைத்த அன்புப் பரிசு ஸ்லோ குக்கர்.
இந்த ஸ்லோ குக்கரில் பிரியாணி முதல் டெசர்ட் வரை முயற்சி செய்து பார்த்திட்டேன். எங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கு.
பாத்திரம்  வாங்கினாலும் போஸ்டிங் போட சோம்பல்.சரி ரெசிப்பி பகிர்வோடு பாத்திரப்  பகிர்வும் போட்டாச்சு.
தேவையான பொருட்கள்;-
மட்டன் அல்லது பீஃப் - 400 கிராம்
( மட்டனில் ஊற வைக்க தயிர் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு 2டீஸ்பூன், வீட்டு மசாலா - 1 டேபிள்ஸ்பூன்,விரும்பினால் கரம் மசாலா - கால் டீஸ்பூன்,  உப்பு தேவைக்கு)
விருப்பமான காய்கறிகள்  கால் கிலோ
( வெங்காயம், தக்காளி, காலிப்ளவர், கொடைமிளகாய், கேரட்)
பார்லி - அரை கப்.
செய்முறை:-
முதலில் ஸ்லோ குக்கரை ஆன் செய்து ஸ்லோவில் வைத்து 10 நிமிடம்  ஓவனைப் போல முற்சூடு செய்ய வேண்டும். பின்பு ஒரு கப் கொதி நீரை விடவும்.


 பின்பு சேர்க்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். பார்லியை தண்ணீரில் அலசி எடுத்து வைக்கவும்.
 பார்லியை ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஏனெனில் நாம் 4 -5 மணி நேரம் மெதுவாக வேக வைக்கப் போகிறோம்.
 முதலில்  கொதிக்கும் நீர், அடுத்து பார்லி சேர்த்து, மசாலாவில் பிரட்டிய மட்டனைச் சேர்க்கவும்.
 பின்பு விருப்பமான காய்கறிகள் சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
 மூடி மீடியம் அல்லது ஹையில் செட் செய்து விடவும்.
 இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறை வந்து பார்த்து மிக்ஸ் செய்து விடவும்.
அதன் பின்பு மீண்டும் 2 அல்லது 3 மணி நேரம் கழித்து வந்து ஸ்விட்ச் ஆஃப் செய்து விடவும்.
   
பரிமாறும் வரை  சூடு மோடில் வேண்டுமானாலும் வைக்கலாம்.
சுவையாக தயார் ஆன பார்லி மட்டன் வெஜ் சூப்பை வெது வெதுப்பாக பரிமாறவும்.இரவு நேரம் செய்து பரிமாறலாம். அல்லது விருந்தில் ஒரு மெனுவாகவும் வைக்கலாம்.

3 comments:

Angelin said...

நானும் இப்பதான் வாங்கியிருக்கேன் சின்ன ஸ்லோ குக்கர் ..இன்னிக்கு ஏதாச்சும் செய்யணும் ..உணவின் flavor இதில் சமைக்கும்போது மிக சுவையாம் ..

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி.ஆமாம், ஏஞ்சல் செமையாக இருந்துச்சு. என்ன சமைத்தாலும் அதனோட texture மாறாமல் சாஃப்ட் ஆக இருக்கு.நான் நிறைய குறிப்புகள் செய்து விட்டேன். இனி ஒன்றொன்றாக போடனும். சோம்பல் தான் போஸ்டிங் போட.

athira said...

நல்லதொரு குறிப்பு... ஆனா எனக்கு ஸ்லோ குக்கர் பிடிக்காது ஆசியா... எதுவென்றாலும் சட்டுப் பட்டென செய்து முடிச்சு சாப்பிட்டு விடோணும்:).. அதனாலயே பிரசர் குக்கர் பிடிக்குது.