Sunday, February 5, 2017

முருங்கைக்கீரை பொரியல்

தே.பொ:-
முருங்கைக்கீரை - 3 கப்
நல்ல எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உ.பருப்பு -1 டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 2
நறுக்கிய வெங்காயம் 1
நறுக்கிய பூண்டு பற்கள் -6
தேங்காய்த் துருவல் - அரை கப்
உப்பு - தேவைக்கு.


செய்முறை:-
முருங்கைகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைக்கவும்.




 மண்சட்டியில் எண்ணெய் விட்டு சீரகம்,உ.பருப்பு, வற்றல், வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கி கீரை சேர்த்து வதக்கவும். 

 அரிசி கழனி சேர்த்து சிறிது வேக விடவும்.
 தேவைக்கு உப்பு சேர்க்கவும். தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். 
மூடி சிறிது நேரம் வைக்கவும்.

பின்பு எடுத்துப் பரிமாறவும்.
சுவையான சத்தான முருங்கைக்கீரைப் பொரியல் தயார்.
- ஆசியா உமர்.

5 comments:

கோமதி அரசு said...

முருங்க்கைக்கீரை பொரியல் பார்க்கவே அழகு.

athira said...

நான் செய்யும் முறைதான் ஆனா களனித்தண்ணி எதுக்கு சேர்க்கிறீங்க? கசப்பை போக்கவோ?.. நாங்கள் அதிகம் அவிக்க மாட்டோம்ம்.. தாளிதத்துள் கொட்டிப் பிரட்டி உடனேயே இறக்கிடுவோம்ம் அப்போ கயர்ப்பு இருக்காது.

Angelin said...

Yummy and healthy keerai koottu. .I've started using clay pots for cooking vegetables green leaves. .They give an extra flavour to the dishes 😄

athira said...

வாவ்வ்வ்வ் இப்போதான் பார்க்கிறேன்.. மண்சட்டி சமையல்ல்ல்ல்:)

Asiya Omar said...

பொதுவாக முருங்கைக்கீரை செய்யும் பொழுது அரிசி கழனித்தண்ணீர் எடுத்து வைப்பேன்.முருங்கைக்கீரை சாஃப்டாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் சிறிது வேக விடுவேன்.