Saturday, February 18, 2017

காளிப்ளவர் ஸ்டூ / Cauliflower stew

தேவையான பொருட்கள்;-
காளிப்ளவர் - கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலம் 1,பட்டை 1 சிறிய துண்டு,கிராம்பு  1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பொடியாக நருக்கியது 1 டீஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1இணுக்கு
நறுக்கிய வெங்காயம் - 2
 தேங்காய்ப்பால்- 2 கப்
விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு - சிறிது
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-

காளிப்ளவரை சிறிய துண்டுகளாக்கி கொதி நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.ஏலம், பட்டை கிராம்பு ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அதனில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் காளிப்ளவர், சிறிது உப்பு  சேர்த்து வதக்கவும்.ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
 காளிப்ளவர் நன்கு வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும். விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் சிறிது சேர்க்கலாம். நல்ல ரிச்சாக இருக்கும்.
 பச்சை மிளகாய் காரம் போதவில்லை என்றால் மிளகும் பொடித்து சேர்த்துக் கொள்ளலாம்.சிம்மில் வைக்கவும். நுரை கூடி வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான காளிப்ளவர் ஸ்டூ தயார்.
இதனை சூப் போலும் குடிக்கலாம்,ஆப்பம் இடியாப்பத்துடனும் பரிமாறலாம்.
காளிப்ளவருடன் விரும்பினால் உருளைக்கிழங்கோ சிக்கனோ சேர்த்தும் ஸ்டூ  செய்யலாம்,

1 comment:

பரிவை சே.குமார் said...

அருமையாக இருக்கும் போல...
ஊரில் செய்து பார்க்கச் சொல்வோம்....