Friday, February 3, 2017

ஈசி உளுந்தம்பால் /Easy Urad dal milk

தேவையான பொருட்கள்;- 
 பால் - 300 மில்லி
உளுந்து - 50 கிராம்
முட்டை - 1

சர்க்கரை - சுவைக்கு 3-4 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்,உப்பு - பின்ச்.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.
செய்முறை:-
உளுந்து ஊற வைத்து பின்ச் உப்பு   தேவைக்கு தண்ணீர் சேர்த்து  ப்ரஷர் குக் செய்யவும். காய்ச்சிய பாலை வெந்து மசித்த உளுந்தில் கலக்கவும்.லூசாக்க வேண்டுமானால் தேவைக்கு தண்ணீர் சேர்க்கலாம்.சுவைக்கு சீனி சேர்க்கவும்.கொதித்து வரும் பொழுது முட்டையை நன்கு அடித்து மெல்லிய கொடி போல் விடவும். அடுப்பை சிம்மில் சிறிது நேரம் வைத்து அணைக்கவும்.ஒரு டீஸ்பூன் நெய் மேலே விட்டு கலந்து டம்ளரில் விட்டுப் பரிமாறவும். 

ஈசி உளுந்தம் பால் செய்ய  இட்லிக்கு ஆட்டும் உளுந்தில் கூட சிறிது எடுத்து பால் சேர்த்து காய்ச்சி மேற் சொன்னபடியும் செய்யலாம்.

ஆட்டிய உளுந்தில்  2 டேபிள்ஸ்பூன்  எடுத்து தண்ணீர் ஒரு கப் சேர்த்து பின்ச் உப்பும் சேர்த்து கட்டி பிடிக்காமல் வேக வைக்கவும். இரு நிமிடத்தில் வெந்து விடும்.. 


உளுந்து வெந்து வரும் பொழுது காய்ச்சிய பால் சேர்க்கவும். பொங்கி  வரும் கவனம்.

 முட்டையை அடித்து தயாராக வைக்கவும்.



மெல்லிய  கொடி போல் முட்டையை ஊற்றவும்.
 சிம்மில் வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
கலந்து விட்டுப் பறிமாறவும்.
சுவையான சத்தான உளுந்தம்பால் தயார்.
முட்டை வாடையே தெரியாது.புது மாப்பிள்ளை பொண்ணுக்கு செய்து கொடுப்பதாய் இருந்தால் நெய்யில் முந்திரி வறுத்துப் போட்டு கொடுக்கலாம்.இக்குறிப்பில் இனிப்பிற்கு சீனிக்கு பதில் கருப்பட்டி,பாலிற்கு பதில் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்.  முன்பே அறுசுவையில் இந்த குறிப்பை பகிர்ந்து இருக்கிறேன்.

3 comments:

athira said...

புதுசா இருக்கே.. இப்போதான் கேள்விப்படுறேன்..

surejini Bala said...

இதுதானா அது. குழந்தை பிறந்திருக்கிற நேரம் சிலர் இதை குடிக்க சொன்னவை எனக்கு இதை தெரியாததால குடிக்கேல்ல .ஒருக்கா ட்ரை பண்ணி பாப்போம்


Asiya Omar said...

இக்குறிப்பில் இனிப்பிற்கு கருப்பட்டி,பாலிற்கு பதில் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்.
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.