Tuesday, March 7, 2017

சிக்கன் டிக்கா மசாலா / Chicken Tikka Masala



தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
சிக்கன் - 400கிராம்
சிக்கன் டிக்கா மசாலா அல்லது சிக்கன் 65 மசாலா - 3 டீபூன்
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
சிக்கன் டிக்கா பேனில் தயார் செய்ய தேவைக்கு - பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்.
மசாலாவிற்கு:
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன்
தக்காளி ப்யூரி - அரை கப்
மஞ்சள்,  மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:
சிக்கனை மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் பட்டர் போட்டு சூடானவுடன் ஊறிய சிக்கனை நன்கு வதக்கி எடுக்கவும்.

அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வாடை போக வதக்க வேண்டும்.சிறிது மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள்,  கரம் மசாலா சேர்க்கவும்.
அத்துடன் தக்காளி ப்யூரி சேர்த்து சுவைக்கு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி கொதிக்க விடவும்.
தயார் செய்த சிக்கன் டிக்காவை சேர்க்கவும்.
ஒரு சேர பிரட்டி சிறிது மூடி போடவும்.
விரும்பினால் நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
நல்ல கிரீமியாக வேண்டுமானால் ஃப்ரெஷ் கிரீம் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.
சுவையான சிக்கன் டிக்கா மசாலா தயார்..
இதனை நாண், பரோட்டா,ரொட்டியுடனோ அல்லது  ஃப்ரைட் ரைஸ் உடன் கூட பரிமாறலாம்.

No comments: