Saturday, March 11, 2017

மண் பானைச்சோறு/ Clay pot rice

ஆரோக்கியமாக இப்படி மண் பானையில் சமைத்து மறுநாள் காலை தண்ணீர் விட்டு மோர், மிளகாய், நறுக்கிய மல்லி,கருவேப்பிலை, உப்பு போட்டு பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க. இந்தக் கோடைக்கு அது தான் பெஸ்ட்.
அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீரைப் பானையில் கொதிக்க வைக்கவும்.
அரிசியை தட்டி உப்பு போடவும்.
கொதித்து வெளியே வடியும்.அதற்கு இப்படி ஒரு கரண்டியை மேலே வைத்து விடவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும்.
கொதி வந்தால் 20 நிமிடத்தில் வெந்து விடும்.வடித்துப் பரிமாறவும்.
மண் பானைச்சோறு தயார். சூடாகச் சாப்பிட்டாலும் சுவை, ஆறினாலும் ஆரோக்கியம். பழையது என்றால் மருத்துவ குணம் மிக்கது.
சுவையான கிராமத்து விருந்து தயார்.

3 comments:

பரிவை சே.குமார் said...

மண் பானைச் சமையல் என்பது ஆரோக்கியம் மற்றும் ருசி இரண்டுக்கும் சிறப்பு.
ஊருக்குப் போனாத்தான் மண் பானைச் சமையல்.

athira said...

ஆஆஆவ்வ்வ்வ் சூப்பர் ஆசியா, ஆனா இப்படி கஞ்சி வடிப்பதை நினைக்கத்தான் பயமாக இருக்கு. இப்போவெல்லாம் எனக்கு மண்சட்டியில் சமைத்தால்தான் சுவையாகவே தெரியுது.

Lalitha Mani said...

Akka am in Saudi... Man paanai epdi Kondu vandheenga ka... Engae kedaikum ka please tell.