Thursday, March 2, 2017

செம்பருத்தி டீ / Hibiscus tea

என் வீட்டுத் தொட்டியில் பூத்த செம்பருத்திப் பூ, தொட்டியில் வளர்த்த புதினாச் செடியில் இருந்து எடுத்த புதினா இலைகள் எல்லாம் சேர்த்து செய்த அருமையான புத்துணர்ச்சி தரக்கூடிய டீ. 
செம்பருத்திப்பூ கிடைத்தால் நீங்களும் போட்டு குடித்துப் பாருங்க. 





தேவையான பொருட்கள்:-
செம்பருத்திப்பூ - 6
தண்ணீர் - 1 லிட்டர்
இஞ்சி தட்டியது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா - 12 இலைகள்
சுவைக்கு - தேன்.

செய்முறை:-
 முதலில் பூவில் உள்ள இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.புதினா இலைகள்,  இஞ்சி தட்டி தயாரக வைக்கவும்.


 ஒரு பாத்திரத்தில் தண்ணீர், செம்பருத்தி இலைகள், இஞ்சி, புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும்.

 நன்கு கொதித்து பூவின் சாறு எல்லாம் இறங்கி  கரும் நிறமாக மாறும்.
அடுப்பை அணைக்கவும்.

தேன் சேர்க்கவும்.நன்கு கலக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.
ஆரோக்கியமான புத்துணர்ச்சி தரக் கூடிய செம்பருத்தி இஞ்சி புதினா போட்ட டீ தயார்.

புதினா, இஞ்சிக்குப் பதில் பட்டை சேர்த்து கொதிக்க விட்டு எலுமிச்சைப் பிழிந்தும் செம்பருத்தி டீ தயாரிக்கலாம்.

ரெசிப்பி பகிர்வு :- சகோதரி.சுலைஹா. மிக்க நன்றி.


3 comments:

surejini Bala said...

ம்ம் யூஸ் குடிச்சிருக்கேன் டீ இன்னிக்குத்தான் கேள்விப்படுறேன்.பாப்போம் நமக்கும் சமர்க்கு பூக்கும்

கோமதி அரசு said...

அருமையான சுவையான டீ.
நான் எலுமிச்சை சேர்த்து அருந்தி இருக்கிறேன்.
இதயத்திற்கு நல்லது.
மாயவரத்தில் பூ தொட்டிகளை கொடுத்து வந்து விட்டேன்.
இப்போது வீட்டுத் தோட்டம் இல்லை.
செம்பருத்தி பூ கிடைத்தால் உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்...

நன்றி